டாடா நிறுவன விளம்பர படத்தில் நடிகராக இயக்குநர் அட்லி

 “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” என்ற விளம்பரபடத்தில் இயக்குநர் அட்லி நடித்துள்ளார். டாடா நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்களை விளம்பரப் படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள
இந்த விளம்பரத்தில் சிங்ஸ் மாஸ்காட்டாக தோன்றியிருக்கும் ரன்வீர் சிங், முன்னணி நட்சத்திரங்களான ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து அட்லிநடித்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் அட்லீ கூறுகையில்..,
“அன்பு தான் என் படைப்புகளின் அடிநாதம்.  சிங்ஸ்  இந்தியாவில் எல்லோரும் பார்க்க வேண்டுமென ஒரு விசயத்தை உருவாக்க விரும்பவில்லை,  இந்திய மக்கள் பார்த்தவுடன் விரும்பும் வகையிலான ஒன்றை உருவாக்கவே நினைத்தார்கள்.  அதனால்தான் நான் என் முதல் விளம்பரத்துக்கு ஒப்புக்கொண்டேன். ரன்வீரின் அசரவைக்கும் துறுதுறுப்பு, பாபி சார் மாயம், ஸ்ரீலீலாவின் ஃப்ரெஷ்னெஸ் — இதையெல்லாம் நாங்கள் மிகச்சிறப்பாக  ஒன்று சேர்த்தோம். இனி அதை  பார்வையாளர்கள் ரசிக்கட்டும்.” என்றார்.