சேரன், இயக்கி, தயாரித்து, கதை நாயகனாக நடித்த படம்க நடித்த படம் ‘ஆட்டோகிராஃப்’. இதில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா என பலர் நடித்தனர்.
கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பள்ளி, கல்லூரி, இளமை பருவங்களில் ஒருவர் சந்திக்கும் காதல் அனுபவங்களை பேசியது. 100 நாட்களுக்கு மேல் ஓடிய இந்தப் படத்துக்கு மூன்று தேசிய விருதுகளும் கிடைத்தது. ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலை பாடிய சித்ரா, எழுதிய பா.விஜய், இசை அமைப்பாளர் பரத்வாஜ் ஆகியோருக்கு விருது கிடைத்தது.
இந்தப் படம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு மே 16 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக இயக்குநர் சேரன் தெரிவித்திருந்தார். இதற்காக ஏ ஐ மூலம் உருவாக்கப்பட்ட ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் அப்போது இப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் நவ. 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடும் இந்தப்படத்தின் 20 நிமிடக் காட்சிகளை குறைத்துள்ளனர்.
Recover your password.
A password will be e-mailed to you.