கல்லா கட்டும் துல்கர்- சமுத்திரகனி நடித்துள்ள”காந்தா”
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நவம்பர் 17 ஆம் தேதி வெளியான படம் ‘காந்தா’. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி கெளரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் திரையரங்குகளில் குறிப்பிடத்தக்க வசூலை பெற்று வருகிறது.
இப்படம் முதல் நாளில் 10 கோடி ரூபாய்வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், ‘காந்தா’ படம் 3 நாட்களில் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.