படத்தில், பறை இசைக்கலைஞர்களாக லியோ சிவகுமாரும், ஆரியனும் நடித்திருக்கிறார்கள்.அவர்கள்,
பறை இசையை மட்டும் இன்றி அந்த இசைக் கலைஞர்களையும் இழிவாகப் பார்க்கும் சிலரால் அவர்களுக்குச் சிக்கல் உருவாகிறது.அது என்ன மாதிரியான சிக்கல்? அதிலிருந்து மீண்டார்களா? இல்லையா? ஆகிய வினாக்களுக்கான விடையாக விரிந்திருக்கிறது படம்.
நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவக்குமார், பறை இசைக்கலைஞர் வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பதற்காக நிறைய மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆரியனும் பறை இசைக்கலைஞர் வேடமேற்று அதற்குத் தக்க நடிக்க முயற்சித்திருக்கிறார்.
நாயகியாக காயத்ரி ரெமா நடித்திருக்கிறார்.ஏற்றுக் கொண்ட வேடத்தை முழுமையாக உள்வாங்கி உணர்ச்சிப்பூர்வமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் ஆகியோரும் குறைவின்றி நடித்து படத்துக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறார்கள்.
ஆர்.கொளஞ்சிகுமாரின் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகளும் பறைஇசை அதிர்வுகளும் கண்களை நிறைத்து மனதிலும் நுழைகின்றன.
தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம்போட வைக்கின்றன.பின்னணி இசையில் பறையின் பெருமிதம்.
சி.எஸ்.பிரேம்குமாரின் படத்தொகுப்பு சீராக இருக்கிறது.
பறை இசையின் பின்னணியை,வலியை,பெருமையைசொல்லு