சித்ராலட்சுமணன் நடத்தும் விருது விழா தேர்வு குழு யார் தெரியுமா?

இந்திய அரசால் வருடம்தோறும் வழங்கப்படும்தேசிய திரைப்பட விருதுகள் கடந்த சில ஆண்டுகளாகவிமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதனால் தேசிய திரைப்பட விருதுகள் அதன் கௌரவத்தை இழந்து வருகிறது. மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படும் விருதுகளில் இன்றைக்கும் மதிப்பு மிக்கதாக கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பெட்டிக்கடையில் விற்கப்படும் பொருட்களை போன்று சினிமா விருது விழாக்கள் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. விழாவுக்கு வருகின்றவர்களுக்கு எல்லாம் விருது என்கிற மாற்றத்துக்கு உள்ளாகி மலிவான பொருளாகி போனது சினிமா விருதுகள். தமிழ் சினிமாவில்

 50 ஆண்டுகளாக தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர், நடிகர் திரைத்துறையில் இயங்கி வரும் சித்ரா லட்சுமணன்  டூரிங் டாக்கீஸ் எனும் வலைத்தளத்தை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில்
2025 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்படத் துறையின் சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் “ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME)” விருது வழங்கும் விழாவை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்புசென்னையில் நடைபெற்றது.
விருது விழா குறித்துசித்ரா லட்சுமணன் கூறியதாவது ஒரு பத்திரிக்கை தொடர்பாளராக இருந்து தான், நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். டூரிங் டாக்கீஸ் சேனலில் சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமில்லாமல், தோல்வியடைந்தவர்கள் பற்றியும் நாம் பேசியுள்ளோம். சினிமாவை பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும் என்று தான் அந்த ஒரு முடிவை எடுத்தோம். நாம் திரையுலகில் இருக்கிறோம், அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான் ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழா. எந்த ஒரு கலைஞர்களுக்கும் கோடி கோடியாய் சம்பாதித்தாலும், மேடையில் வாங்கும் கைதட்டல்கள் அதற்கு ஈடாகாது. இந்த விருது வழங்கும் விழாவிற்கு
கே. பாக்யராஜ், தேர்வுக் குழுவின் தலைவராக செயல்பட, குஷ்பூ சுந்தர், இளவரசு, முரளி ராமசாமி, டி. சிவா, ஆர். கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கின்ற குழுவில் இடம்பெற்றுள்ளனர்.பத்திரிக்கை தொடர்பாளர் தொடங்கி, இயக்குனர் கதாநாயகன், கதாநாயகி என 50 பிரிவில்விருதுகள் வழங்கப்பட உள்ளது. வழக்கமாக கொடுக்கப்படும் விருதுகள் மட்டும் இல்லாமல்,
சிறப்பு விருதுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது, இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 25ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது என கூறினார். விருது தேர்வு குழுவில் இடம் பெற்றுள்ளவர்களை பார்க்கும் போது தமிழகத்தில் நடைபெற்று வரும் விருது விழாக்களை போன்ற ஒன்றாக இதுவும் இடம்பிடிக்கும் என தெரிகிறது.