‘ஜமா’ இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேரும் புதிய படம்!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுடன் தொடர்ச்சியாக படங்களை தயாரித்துவரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக பெயரிடப்படாத இப்படத்தை உருவாக்கி வருகிறது.
‘ஜமா’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இசையமைப்பை ‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் கையாள, ஒளிப்பதிவை ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ பட ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆர் கேலிஸ்ட் மேற்கொள்கிறார். மேலும் படத்தொகுப்பை பார்த்தா செய்ய, மகேந்திரன் கலை இயக்கத்தை செய்கிறார். பாடலாசிரியர்கள் மோகன்ராஜன், பாக்கியம் சங்கர் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கவனிக்கிறார்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படைப்பு, அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பேமிலி என்டர்டெயின்ராக உருவாகிவருகிறது.