பராசக்தி சுயமரியாதையை பற்றி பேசும் முக்கியமான படம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 10 ஆம் தேதி ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

முதல் பாடலான ‘அடி அலையே’ , 2வது பாடலான ‘ரத்னமாலா’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது ‘பராசக்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.
படத்தில் பிரதான வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் ரவிமோகன் பேசுகிறபோது
நான் நாயகனாக நடிக்கும் இசை வெளியீட்டு விழாவில் பேசுவது கொஞ்சம் கூச்சமாக இருக்கும். ஆனால் சிவகார்த்திகேயன் படத்தில் பேசுவது அப்படி இல்லை. பலரின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட தங்கம் பராசக்தி இந்த வருடத்தின் மிக சிறந்த படமாக  பராசக்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சிவகார்த்திகேயன் எதுவுமே இல்லாமல் இது போன்ற மேடைகளில் ஆரம்பித்து தற்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால் இவர் அனைத்துக்கும் தகுதியானவர்.
அவர் இன்னும்  பெரிய மேடை ஏறி பேச வேண்டும் அதற்க்கு நீங்கள்(ரசிகர்கள்) கூடவே இருக்க வேண்டும்.
பொதுவாக பல நல்ல ஆண்கள் இருக்கும் இடத்தில் ஒரு பெண் பாதுகாப்பாக உணர்வார்கள் என்று சொல்வார்கள். ஆனால் முதல் முறையாக ஒரு பெண் (சுதா கொங்கரா) இருக்கும் இடத்தில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். எந்த தடைகள் வந்தாலும் தனி ஆளாக நின்று எதிர்கொள்வது என்பது  தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கப் போகிறது. இந்த தீயை (பராசக்தி) நிறைய பேர் அணைக்க வெளியில்  முயற்சி செய்தார்கள். இந்த தீ ஆபத்தான தீயில்லை கடவுள் முன்பு ஏற்றப்படுகின்ற அகல்விளக்கு.
பராசக்தியில் ஏன் வில்லனாக பண்ணுகிறீர்கள் என்று நிறைய கேட்டார்கள். எனக்கு ரெண்டே காரணம் தான் இருந்தது ஒன்று சுதாவின் கதை மற்றொன்று சுதா.  ஆனால் இந்த முடிவு குறித்து தற்போது நினைத்துப்பார்க்கையில் எந்த கவலையும் இல்லை மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. என்னை இத்தனை நாட்களாக ஹீரோவாக பார்த்தீர்கள் இனிமேல் என்னை வில்லனாக பார்ப்பீர்கள்.
இந்தப் படம் சுயமரியாதையை காப்பாற்றுகின்ற படம். நானும் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய சுயமரியாதையை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறேன். முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. கண்ணுக்கு தெரிபவர்களைப் பற்றிதான் எனக்கு கவலை.  அனைவருக்கும் ஒரு அண்ணனாக சொல்கிறேன் சுயமரியாதையை மட்டும் இழக்கக்கூடாது. இதை  மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் நல்ல மனிதனாக இந்த உலகத்தில் வாழ முடியும். இப்படத்தை எல்லோரும் கொண்டாடுங்கள் நன்றி.