வி.ஜே.சித்து இயக்கி, நாயகனாக நடித்து வரும் ‘டயங்கரம்’ படத்தின் முதல் பார்வையைவெளியிட்டுள்ளது
‘டயங்கரம்’ படத்தினை வி.ஜே.சித்து இயக்கி, நாயகனாக நடித்து வருகிறார். இதில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக சித்து குமார், எடிட்டராக பிரதீப் ஈ.ராகவ் உள்ளிட்டோர் பணிபுரிந்த்து வருகிறார்கள். வேல்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.
இன்றைய இளைஞர்களின் துடிப்பான ஆற்றலை மையப்படுத்தி காமெடி, எமோஷன் உள்ளிட்டவை கலந்த கதையாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார் வி.ஜே.சித்து. ஜூன் மாதத்தில் இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.