இப்படம் ஜனவரி 30ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு இப்படத்தின் வெளியீடு, 2024 ஜுன் மாதம் வெளியாகும் என அப்போது வெளியிட்ட டீசரில் குறிப்பிட்டிருந்தார்கள். அப்போதே இந்தப் படத்தைப் பற்றியும், டீசரையும் படத்தின் நாயகி அவரது சமூக வலைத்தளங்களில் பகிரவில்லை.
அதன்பின் படத்தின் வெளியீடு பற்றி எந்த சத்தமும் இல்லாமல் ‘லாக்டவுன்’ காலகட்டம் போல அமைதியாகப் போனது. கடந்த வருடம் டிசம்பர் 5 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவித்து, பின் மீண்டும் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்து, கடைசியில் அதையும் தள்ளி வைத்தார்கள். தற்போது அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 30 ஆம்தேதி எந்தத் தள்ளி வைப்பும் இல்லாமல் படத்தை வெளியிட்டு விடுவார்கள் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
இந்தப் படத்தை அடுத்து விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ படத்தை லைகா நிறுவனம் வெளியிட உள்ளது.
Recover your password.
A password will be e-mailed to you.