இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய,புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்தப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும், என்.யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’,‘கருடன்’,‘மகாராஜா
ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘காளிதாஸ் 2’ திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20 அன்று நடைபெற்றதுஇந்த விழாவில் படக்குழுவினரோடு திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இது ஒரு ரொம்ப நல்ல க்ரைம் திரில்லர். கதை சொல்லப்பட்ட விதம், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசை இந்தப் படத்துக்கு ஒரு பெரிய தூணாக இருந்தது.
சமீபத்தில் சில சிறிய படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கின்றன.
முன்பு இப்படி நடக்கும் என்று எல்லோருக்கும் எப்போதும் நம்பிக்கை இருக்காது. ஒரு படம் நல்ல படம் என்று நம்புவோம். ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம். இப்போது அந்த நிலை மாறிக் கொண்டு வருகிறது. அந்த நம்பிக்கை ‘காளிதாஸ் 2’-க்கும் தொடர வேண்டும்” என்று பேசினார் பா.ரஞ்சித்.