கடவுள் நம்பிக்கை போல் சாத்தான் நம்பிக்கையும் மக்களிடம் இருந்திருக்கிறது.அவர்கள் சாத்தானுக்கு மனித உயிர்களைப் பலி கொடுக்கும் வழக்கமுடையவர்கள் .அம்மக்கள் வசிக்கும் கிராமத்தில் பல்லாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பல மர்ம மரணங்கள் நடக்கின்றன.அவற்றை விசாரிக்க காவல்துறைவருகிறது.
படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருப்பவர் ஐராவின் அம்மாவாக நடித்திருக்கும் மோன பத்ரே.
படத்தின் இறுதியில் வரும் சாந்தினி தமிழரசனுக்கு முக்கியமான கதாபாத்திரம்.அதற்கு அவர் சரியாகப் பொருந்தியிருப்பது அவருக்கும் படத்துக்கும் பலம்.
கதையில் இருக்கும் அச்ச உணர்வுகளைக் காட்சிகளிலும் காட்டி மேலும் பயமுறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமி.கதைக்களமும் அதில் வருகிற வீடும் அவருக்கு மிக வசதியாகஅமைந்திருக்கிறது.
இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசை மிக மிக முக்கியம். அதனை முழுமையாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் அஷ்வின் கிருஷ்ணா.
ராஜ்குமார் மற்றும் கோவை அபிஷேக் ஆகிய இருவரும் படத்தொகுப்பாளர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் மணிகண்டன் ராமலிங்கம்.மர்மமரணங்கள் எப்படி நடக்கின்றன? அவற்றை எப்படித் தடுத்து நிறுத்துகிறார்கள்? என்பனவற்றைச் சொல்லிவிட்டார் என்றாலும் மர்ம மரணங்களின் பின்னணி என்ன? என்கிற முக்கியமான கேள்விக்கான விடை அடுத்தபாகத்தில் என்று சொல்லிவிட்டார்.