விஜய் சேதுபதி வெளியிட்ட ரீயூனியன் முதல் பார்வை

நடிகர் அருள்தாஸ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரீ யூனியன்’  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்’ கை நடிகர்விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர்  சாட்ஸ் ரெக்ஸ் (Satz Rex) இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ரீயூனியன் ‘ திரைப்படத்தில் அருள்தாஸ், ஜெயக்குமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன்,சுப்பிரமணியன்,ஜெமினி மணி,சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன் ,கராத்தே ராஜா,சிலுமிசம் சிவா, குட்டி கோபி ,ஹரிஷ் , அருண் உதயன், சரத் , க்ரிஷ்&அய்ஷூ ,காக்காமுட்டை ரமேஷ், பூவையார், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விக்கி மேக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்கி டிஜே இசையமைத்திருக்கிறார். முத்தமிழன் ராமு படத்தொகுப்பு பணிகளை கவனிக்க கலை இயக்கத்தை வெங்கடேஷ் குமார்  மேற்கொண்டு இருக்கிறார்.
கேங்ஸ்டர் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெயாஸ் (Kartik Jayas) தயாரித்திருக்கிறார்.