இதவரை எங்கள் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட நீண்ட புகார் பட்டியலில் உள்ள எந்த புகாருக்கும் தங்கள் தரப்பிலிருந்து எவ்வித தீர்வும் வழங்கப்படாமல் முடிவின்றி நீண்டு வருவதையும் தாங்கள் மறுக்க இயலாது.
ஆகவே, தங்கள் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும் முதலீட்டையும்கூட பிரதானமாக பாதிக்கக்கூடிய இந்த தன்னிச்சையான வேலை நிறுத்த அறிவிப்பை திரும்பப் பெறுமாறும், முன்னரே இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டபடி 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியான பிறகு, பரஸ்பரம் பொருத்தமான ஒரு தேதியில் இரு அமைப்பின் பிரதிநிதிகளும் சந்தித்து அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்து தீர்மானிக்கலாம் என்றும் அன்புடன் கேட்டுகோள்கிறோம்.
இதனிடையே கடந்த இரு தினங்களாக ஊடகங்களிலும், சமுக வலைதளங்களிலும் வெகு வேகமாக பரவி வரும் தங்கள் அமைப்பின் சமீபத்திய பொதுக்குழு தீர்மானங்களின் நகலும், பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான செய்திகளும் தென்னிந்திய நடிகர் சங்கத்தையும், அதன் உறுப்பினர்களையும் மட்டுமே திரைத்துறையின் சிக்கல்கள் அனைத்திற்கும் முழுமையான காரணமாக வடிவமைத்துப் சித்தரித்து வருவ்து பெரும் வேதனைக்குரியது.
அது தவறான தகவல் எனில், உடனடியாக அதை மறுத்து தங்கள் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடுமாறும் அந்தத் தகவல்கள் தங்கள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருந்தால் உடனடியாக அத்தகு உண்மைக்கு புறம்பான அறிக்கையை நமது சந்திப்பிற்கு முன்னர் திரும்பப் பெறுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இணைந்து செயல்பட்டு திரைத்துறையினர் அனைவரின் நல்ல நிகழ் காலத்திற்காகவும் வளமான வருங்காலத்திற்காகவும் எங்கள் ஒத்துழைப்பை நல்க என்றென்றும் ஆயத்தமாக உள்ளோம். அதையே துறை சார்ந்த பிறரிடமும் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.