டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன், ஸ்டெப் ஒன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு முகேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். ஜூன் 26-ல் வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் கிஷோர் குமார் பேசும்போது,
இப்படத்தின் கதையை அவரிடம் 40 நிமிடம் விவரித்தேன். நான் சொன்ன ஐடியா பிடித்திருந்தது. அவருடைய திரையுலக பயணத்தில் நினைவில் நிற்கத்தக்க அளவுக்கு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் சனந்த் கேரக்டருக்கு 2 வெவ்வேறு வடிவங்கள் இருக்கின்றன. இதனை அவருடைய அற்புதமான நடிப்பு திறனால் வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார். காதல் என்ற எமோஷன் எப்போதும் மாறாது. எவர்கிரீனாக இருக்கும். இதற்கு முன் எத்தனையோ காதல் கதைகள் வந்திருந்தாலும் ‘ஹார்ட்டின்’ தனித்து இருக்கும்” என்றார்.