சேரனின் ‘ஆட்டோஃகிராப்’ ரீ-ரிலீஸ்

ஆட்டோகிராப் திரைப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் மறு வெளியீடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சேரன் தயாரிப்பில் அவரே நாயகனாக நடித்து இயக்கி2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியான படம் ‘ஆட்டோஃகிராப்’. 150 நாட்களை கடந்து 75 திரையரங்குகளில் ஓடியது. காதலர்களால் கொண்டாடப்பட்டது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற ஆட்டோகிராப் படத்தில்சிநேகா, கோபிகா, கனிகா, மல்லிகா, இளவரசு உள்ளிட்ட பலர் சேரனுடன் நடித்திருந்தனர்.
பல்வேறு திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டது. மேலும், தேசிய விருது, தமிழக அரசு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றது. அதுமட்டுமன்றி கன்னடம், தெலுங்கு மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் மறுவெளியீட்டை முன்னிட்டு ஏஐ தொழில்நுட்பத்தில் வீடியோ ஒன்றிணை உருவாக்கி வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த வீடியோ பதிவு இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
Comments (0)
Add Comment