சினிமாவில் கிடைத்த வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் தினேஷ்.
அந்தப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்து விட்டாலும் இன்னமும் தனிக் கதாநாயகனாக அவர் வெற்றி பெறவில்லை
இரண்டு நாயகர்களில் ஒருவராகத்தான் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
தினேஷ்நடிப்பில் கடைசியாக வெளியான லப்பர் பந்து படத்திலும் இரண்டு நாயகர்களில் ஒருவராகத்தான் நடித்திருந்தார்.
அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன் அப்படத்தில் தினேஷ் சிறப்பாக நடித்திருந்தார்.அதோடு இதுவரை அட்டகத்தி தினேஷ் என்றால்தான் தெரியும் என்பது மாறி லப்பர் பந்து படத்தில் அவர் ஏற்றிருந்த கெத்து கதாபாத்திரத்தை முன்வைத்துகெத்து தினேஷ் எனஅழைக்கத்
அட்டகத்தி படம் வெளியான பின்பு அவருக்குக் கிடைத்த வரவேற்பு போல் இப்போது லப்பர் பந்து பட வெளியீட்டுக்குப் பின் பெரும் வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
அதன் விளைவு அவரை நடிக்க வைக்க எண்ணி அவரிடம் கதை சொல்ல பலரும்முயற்சி மேற்கொண்டனர்.ஆனால் அவ்வளவு பேரும் சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
கதை சொல்லப் போனவர்களிடம் கதையெல்லாம் அப்புறம் கேட்டுக் கொள்கிறேன் என் சம்பளம் நான்கரை கோடி.அதைத் தர முடியுமானால் சொல்லுங்கள் கதை கேட்கிறேன் என்று சொன்னாராம்.அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துதான் அனைவரும் திரும்பிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
லப்பர் பந்து படத்தில் சுமார் நாற்பது இலட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தவர் அந்தப்படம் ஓடியதும் அப்படியே பத்துமடங்கு அதிகம் கேட்கிறாரே என்று எல்லோரும் வியக்கிறார்கள்.
யாரும் கேட்ட சம்பளத்தைத் தரவில்லையென்றதும்,