அதிரடி காட்டும் சூர்யா நடித்துள்ள சீன் படத்தின் ட்ரெய்லர்

தீபாவளி திரைப்பட வெளியீட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம்’ சீன்’. இந்த படத்தின் ட்ரெய்லர் அக்டோபர்31 ஆம் தேதி வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ழகரம் ஸ்டூடியோஸ் அதன் எக்ஸ் பக்கத்தில் இதனைப் பகிர்ந்துள்ளது.

2.40 நிமிடங்கள் ஓடும் ட்ரெய்லர் காட்சிகளில், தனது திறமை மீது அபார நம்பிக்கை கொண்ட டிஎஸ்பி இன்பராஜாக வரும் சூர்யா எதற்கும், யாருக்கும் அலட்டிக் கொள்ளாத கூல் காவல்துறை அதிகாரியாக காட்டப்பட்டுள்ளார். வேலையை விட்டுச் சென்ற பின்பு, உயரதிகாரி லாலின் வேண்டுகோளுக்காக ஒரு கொலை வழக்கை விசாரிக்க அவர் மீண்டும் பணியில் சேர்கிறார்.

நஸ்லென் வில்லனாக வருகிறார். கண்ணாம்பூச்சி ஆடும் வில்லனை தனக்கு நிகரானவராக கருதாத இன்பராஜ், அப்பாவி போர்வையில் கொலைகளைச் செய்யும் வில்லனை அவரைப் போலவே மாறி தேடிக் கண்டுபிடிக்கிறார்.

நாயகி நஸ்ரியா, முதலில் சூர்யாவின் வீட்டில் வேலை செய்பவராக காட்டப்பட்டாலும், சில காட்சிகளில் அதிரடியாக சண்டை போடுவது, அந்த கதாபாத்திரம் மற்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

இந்தப் படத்தை ழகரம் ஸ்டூடியோஸ் சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் தயாரித்துள்ளனர். ஜெய்ஸ்ரீ தாமோதரன் இணைந்து தயாரித்துள்ளார். படத்துக்கு வினீத் அகஸ்டின் ஒளிப்பதிவும், அஜ்மல் சாபு படத் தொகுப்பும் செய்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுடன் பிரேமலு நஸ்லென், நஸ்ரியா, ஜான் விஜய், ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று திரைக்கு வர இருக்கிறது.

 

Comments (0)
Add Comment