காதலனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித்தின் கதாபாத்திரம், இளைஞர்களின் பிரதிநிதிபோல் வடிவைமைக்கப்பட்டிருக்கிறது.உங்
சரத்குமார் மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ் நல்ல தேர்வு.குறைவான திரை இருப்பு என்றாலும் பார்ப்போர் மனதில் நிறை இருப்பு.
ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச் செல்வி,டீனா பாட்டியா, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ்,வையாபுரி உட்பட பலர் படத்தில் இருக்கிறார்கள்.
ஆனந்த் என்.நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.பெரும்பாலான காட்சிகள் ஆழ்கடலில் நடக்கின்றன. உண்மையாகவே அங்குபோய் படப்பிடிப்பு நடத்திய உணர்வைக் கொடுத்திருக்கிறார்.
ஜாஸி கிப்ட். வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசையும்,ரசூல் பூக்குட்டியின் ஒலிவடிவமைப்பும் கடலுக்குள் இருக்கும் ஒலிகளை நமக்கு அறிமுகம் செய்கின்றன.
படத்தொகுப்பாளர் கே.சீனிவாஸுக்கு குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு நகரும் படத்தை போரடிக்காமல் கொடுக்க வேண்டிய சவால்.சில இடங்களில் நிறைவு.