இயக்குநர்களுக்கு தெளிவான திட்டமிடல் தேவி – பிரித்விராஜ்

நடிகர் பிரித்விராஜ்  படங்களில்  நடித்துக் கொண்டு இருக்கும்போதே இயக்குனராகவும் மாறினார். மோகன்லால் நடித்த  ‘லூசிபர்’படத்தை இயக்கினார். தொடர்ந்து ‘ப்ரோ டாடி’ என்கிற காமெடி படத்தை மோகன்லால் நடிக்க இயக்கினார்.

தற்போது  லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக ‘எம்புரான்’ படத்தை இயக்கியுள்ளார். மார்ச் 27 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

படம் சம்பந்தமான புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பிரித்விராஜ் பேசியபோது,

“எனக்கு படப்பிடிப்புக்கான லொகேஷன்களை கண்டுபிடித்து உறுதி செய்வதும் அதற்கான திட்டங்களை வகுப்பதும் தான் சிரமமான பணி. ஆனால் திட்டங்களை வகுத்த பின்பு படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் எல்லாமே குறித்த நேரத்தில் நடைபெறுவதில் எந்த பிரச்னையும் ஏற்பட்டது இல்லை.
என்னுடைய உதவியாளர்கள் அனைவரிடமும் என்னுடைய திட்டம் குறித்து மிகத் தெளிவாக விவரித்து விடுவேன். குறிப்பிட்ட நேரத்தில் டப்பிங், எடிட்டிங், மிக்ஸிங் என அனைத்து பணிகளும் முடித்தே
ஆக வேண்டும்.இப்படி திட்டமிட்டு செயல்பட்டதால் தான் என்னுடைய மூன்று படங்களையும் ரிலீஸுக்கு சில நாட்கள் முன்பே முடித்துவிட்டு டென்ஷன் இல்லாமல் புரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். கடைசி நேரத்தில் இன்னும் அந்த வேலை பாக்கி இருக்கிறது, இந்த வேலை பாக்கி இருக்கிறது என்கிற டென்ஷன் எதற்கு ? தெளிவான திட்டமிடல் இயக்குனருக்கு கட்டாயம் தேவை”என்று கூறினார்
Comments (0)
Add Comment