குட் டே- திரைப்பட விமர்சனம்

கதாநாயகன் என்பவன் வலிமை பொருந்தியவனாக இருக்க வேண்டும் சாகசங்களை நிகழ்த்தக்கூடியவனாக இருக்க வேண்டும் என்கிற வழக்கமான தமிழ் சினிமா பார்முலாவை சுக்கு நூறாக்கியிருக்கிறது ஒரு இரவில் நடந்து முடியும் திரைக்கதை மூலம் குட்டே திரைப்படம்.
சரியான திரைக்கதை அதற்கு பொருந்தி போகிற நாயகன் இருந்தால் பார்வையாளனுக்கு போரடிக்காமல் ஒரு திரைப்படத்தை வழங்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்
குட்  டே படத்தின் கதை நாயகன் பிரித்திவிராஜும் ,இயக்குனர்  அரவிந்தனும்.
குடிகாரனாக முழுநீள படத்திலும்  இவ்வளவு யதார்த்தமாக அதே சமயம் காட்சிகளுக்குபொருத்தமான மாறுபட்ட உணர்வுகளோடு
எந்த தமிழ் ஹீரோவும் இதுவரை நடித்திருக்காத கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார் நாயகன் பிரித்திவிராஜ்
குடிகாரன் மன நிலை, அவன் பேசும் பேச்சு ,அவன் வாங்கும் அடிகள் ,அவன் கருணை ,அவன் குறிக்கோள் என காட்சிகளில் பார்வையாளனை உணர வைத்திருக்கிறார் கதை நாயகன்.
தொப்பை வயிறு,அழுக்கு சட்டை போலீஸ் ட்ரஸ் ,குப்பை என இவர் உடம்பு முழுக்க இருந்தாலும் படம் பார்ப்பவர்களை வெறுக்க ,சிரிக்க ,அழுக வைக்கிறார்பிரித்திவிராஜ் ,
குறிப்பாக நாயகன் தன் மனைவி இரண்டு பெண் பிள்ளைகளை சுவற்றில் வரைந்து உணர்ச்சி
மிகுந்து பேசும் காட்சி படம் பார்க்கும் அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கும்.
தான் BA வரலாறுக்குப் பிறகு படிக்க  ஆசை பட்டு அது முடியாமல் போன ஏக்கத்தை சொல்லி புலம்பும் காட்சியில்குடிக்கு எதிராக பிரச்சாரம் செய்யாமல் குடியின் கொடுமையை உணர்த்தி இருக்கிறார்கள்.
 M R .ராதா அவர்கள் ரத்த கண்ணீர் படத்தில் செய்த நக்கல், நையாண்டிபோல இந்த படத்தில் நாயகன் பிரிதிவிராஜ் சில இடங்களில் அவரது பாணியில் செய்திருகிறார்.
மைனா நந்தினி ,ஜீவாசுப்ரமணியம் நடிப்பு ,கோவிந்வசந்தாவின் இசை ஒரு இரவில் நடக்கும் கதைக்கான பொருத்தமானமதன் குணதேவ் ஒளிப்பதிவு சிறப்பு.
குறைந்தபட்ஜெட்டில் குறைவான கதாபாத்திரங்களை நடிக்க வைத்து சமூகத்திற்கும் செய்தி சொல்லும் வகையில் திரைப்படத்தை இயக்க முடியும் என்பதற்கான அடையாளம் குட்டே திரைப்படம்.

 

Comments (0)
Add Comment