பொழுதுபோக்கு உலகம் என்பது டிரெண்டிங்கை பின்பற்றுவதால் வளர்வதில்லை; புதிய டிரெண்டிங்கை உருவாக்குவதன் மூலமே வளர்கிறது என்பதை அடிப்படையாக கொண்டு செயலாற்றி வருகிறது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5,
ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், தெற்காசிய உள்ளடக்கங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முன்னணி டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமாகவும் விளங்குகிறது. 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களை சென்றடையும் ZEE5, Zee Entertainment Enterprises Ltd. நிறுவனத்தின் டிஜிட்டல் பொழுதுபோக்கு சேவையாக செயல்படுகிறது.
இந்நிறுவனம் இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் என ஏழு மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், AI தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கதைகள், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என விரிவான பொழுதுபோக்கு உலகத்தை ஒரே தளத்தில் வழங்கும் வகையில்அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ஜி5 வலைத்தள நிறுவனம்.
இந்த புதிய முயற்சியில் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குநர்கள் மற்றும் படைப்பாளர்கள் இணைந்துள்ளனர். இந்தியில் Jio Studios, Maddock Films, AAZ Films, 200 NOTOUT CINEMAS, DICE Media, Collective Studios Historyverse, Tips Films, Pen Studios, Ellipsis Entertainment, Reliance Entertainment, Jar Pictures ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன.
பிராந்திய மொழிகளிலும் ZEE5 தனது முதலீட்டை விரிவுபடுத்தியுள்ளது. மலையாளத்தில் Thespian Films, தெலுங்கில் Annapurna Studios, Sri Venkateswara Creations, Sitara Entertainments, Sri Venkateswara Cine Chitra, தமிழில் Passion Studios, Vriddhi Cinemas, கன்னடத்தில் KVN Productions, மராத்தியில் Bahawa Entertainment, Pratisaad Productions, Kyra Kumar Kreations, வங்காளத்தில் Acropolis Entertainment, Anjan Dutt Productions, Why So Serious Films, Surinder Films உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து புதிய படைப்புகளை வழங்குகிறது.
இந்தி உள்ளடக்கங்கள்
இந்தி பிரிவில் Kambli, The Scam: Leaked, Coffee King, Jeena Isi Ka Naam Hai 2.0 (R. மாதவன் தொகுப்பில்), Zee Horror Show, Rangbaaz Season 4, Janaawar 2, Bakaiti Season 2 உள்ளிட்ட தொடர்கள் இடம்பெறுகின்றன.
திரைப்படங்களில் Hai Jawani Toh Ishq Hona Hai (வருண் தவான், பூஜா ஹெக்டே, மௌனி ராய்), Bandar, Bharat Bhagya Vidhata, Pooja Meri Jaan, Sarvgunn Sampann, Ghamasaan, Ikroop, Dalimb உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.
தமிழில் Koose Munisamy Veerappan, Thadayam ஆகிய சீரிஸ்களின் புதிய பகுதிகள் வெளியாகின்றன.
மேலும் Ananthakaalam, Thee Kural (இந்தியாவின் முதல் சுயாதீன ராப் போட்டி நிகழ்ச்சி) ஆகிய புதிய தொடர்கள் அறிமுகமாகின்றன.
தமிழ் திரைப்பட வரிசையில் Demonte Colony 3, நயன்தாரா, கவின் நடிப்பில் Hi! மற்றும் Raawadi ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.
தெலுங்கு
Shrimathi, Objection Mylord உள்ளிட்ட ஒரிஜினல்கள், Jayammu Nishchayammu Ra டாக் ஷோவின் புதிய சீசன், Venky Anil 5, NBK111, Vrushakarma உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன.
கன்னடம்
Ayyana Mane புதிய சீசன், Bitcoin Scam, Operation Bangara ஆகிய சீரிஸ்களுடன் Karavali திரைப்படமும் வெளியாகிறது.
மலையாளம்
A Queen, Malabar Cup, Kerala Underground (சுயாதீன ராப் பேட்டில் நிகழ்ச்சி), Balan The Boy ஆகியவை இடம்பெறுகின்றன.
மராத்தி
Hey Kay Navin? புதிய சீசன், Aga Aai, Aaho Aai தொடர் மற்றும் Tumbadchi Manjula, Bhootam Bhayam திரைப்படங்கள் வெளியாகின்றன.
வங்காளம்
Shwetkali, Lalbazaar ஆகிய தொடர்களின் புதிய சீசன்களுடன் Aloor Dosh, Priyo Bondhu ஆகிய புதிய ஒரிஜினல்களும் அறிமுகமாகின்றன.
இந்த புதிய உள்ளடக்க அறிவிப்பின் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய, பல மொழிகளில் தரமான பொழுதுபோக்கை வழங்கும் தளமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது ZEE5. இந்தியாவின் முன்னணி படைப்பாளர்கள், பிரபலமான திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் புதிய ஒரிஜினல்களை ஒரே தளத்தில் கொண்டு வரும் இந்த முயற்சி, ZEE5-ன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.