பறவைகள் நலம் காக்கும் கிராம மக்கள் பற்றிய’ கூடு’

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட்
( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா ஸ்டுடியோஸ் ( Panorama Studios ) தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘கூடு’ ( KOODU )
ஒரு வியப்பூட்டும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், மனிதநேயம், கருணை மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்ட நெகிழ்ச்சியான கதையைச் சொல்ல வருகிறது.
அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கியுள்ள ‘கூடு’ திரைப்படம், தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் நிகழ்ந்த உணர்வுப்பூர்வமான சம்பவத்தை மையமாகக் கொண்டது. அரிய வகைப் பறவை ஒன்று மின்மாற்றிக்குள் (Electrical Transformer) தனது முட்டைகளை இட்டுக் கூடு கட்டுகிறது. அந்தக் கூட்டையும் அதிலுள்ள உயிர்களையும் பாதுகாக்க வேண்டிய சூழலில், கிராம மக்கள்  அந்தப் பறவையின் முட்டைகள் பாதுகாப்பாகப் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் வரை, தொடர்ந்து 35 நாட்களுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கத் தாங்களாகவே முன்வருகின்றனர்.
நகைச்சுவை, அன்பு, உணர்ச்சி என அனைத்தையும் கலந்து உருவாகியுள்ள இப்படம், ஒற்றுமையின் மகத்துவத்தையும் கூட்டாக வெளிப்படும் மனிதநேயத்தின் வலிமையையும் எடுத்துரைக்கிறது. வழக்கமான கதாநாயகத்தன்மையைத் தாண்டி, சாதாரண மனிதர்களும் அசாதாரணமான மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
தமிழகக் கிராமியப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், அனைத்து தலைமுறை ரசிகர்களையும் கவரக்கூடிய உலகளாவிய உணர்வுகளைக் கொண்ட ஒரு நம்பிக்கையூட்டும் திரைப்பட அனுபவமாக இருக்கும்.
உண்மையான கிராமப்புற இடங்களில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள் மற்றும் திறமையான கலைஞர்கள் இணைந்து நடித்துள்ளனர். VJ கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரச்சிதா மகாலட்சுமி, நமோ நாராயணா, ஷா ரா, சார்லஸ் வினோத், அனிதா சம்பத், சசி செல்வராஜ், திராவிட் செல்வம், VJ ஆஷிக் மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.
Comments (0)
Add Comment