FLAG- திரைப்பட விமர்சனம்

தேசப்பற்று, தேசிய ஒற்றுமை, இந்தியாவின் கலாச்சாரப் பெருமை என பல விஷயங்களை ஒரு சிறுவனின் பயணத்தின் வழியாகச் சொல்ல முயற்சித்திருக்கும் திரைப்படம் ‘FLAG’.

இயக்குநர் எஸ்.பி. பொன் சங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம், வழக்கமான கமர்ஷியல் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, தேசியக் கொடியின் முக்கியத்துவத்தையும் இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பேசுகிறது

இந்திய ஒன்றியத்தின் தேசியக்கொடியை,கர்நாடகாவின் தார்வாது மாவட்டத்தில் ஹூப்ளி அருகில் உள்ள பெங்கேரி என்ற ஊரில் செயல்படும்,கர்நாடக காதி கிராமோத்யோக சம்யுக்த சங்கத்தில்தான் தயாரிக்கிறார்கள்.

அங்கு அந்தக் கொடியைத் தயாரிக்கும் பணியில் இருக்கும் ஒரு முதியவருக்கு,தில்லியில் தேசியக்கொடி ஏற்றப்படுவதைப் பார்க்கவேண்டும் என்று ஆசை.அவருடைய உடல்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.இந்நிலையில்,அவருடைய பேரன் அதே ஆசையால் உந்தப்பட்டு யாருக்கும் சொல்லாமல் வீட்டிலிருந்து புறப்படுகிறான்.அவன் நினைத்தபடி தேசியக்கொடி ஏற்றுவதைப் பார்க்க முடிந்ததா? இல்லையா? அவனுடைய பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.

தனுஷ் நடிப்பில் வெளியான
‘இட்லிகடை’படத்தில் குட்டி தனுஷாக நடித்த சிறுவன் தி ஹான் தான்
படம் முழுக்கநிறைந்திருக்கிறார்.
அந்த வயதுக்குரிய துடிப்பு,போகிற வழியில் சிக்கல்கள் ஏற்படும் நேரங்களில் தவிப்பு,புதுப்புது இடங்கள் தரும் சிலிர்ப்பு ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தாத்தாவாக நடித்திருக்கும் மிக்கி மக்கி ஜா,கொடியின் பெருமைகளைச் சொல்லப்பயன்பட்டிருக்கிறார்.அவருடைய தோற்றமும் நடிப்பும் அதற்கு முழுமையாக இணங்கியிருக்கிறது.

பெங்காலிப் பெண்ணாக நடித்திருக்கும் பபுஷாவின் வேடம் கலங்க வைக்கிறது.அவருடைய நடிப்பு ரசிக்க வைக்கிறது.

கிரி துவாரகேஷ், ஆனந்த், அபிநவ் கோசாமி, அமீர் மாலிக், சினி ஆகிய நடிகர்களும் கவனம் ஈர்க்கிறார்கள்.

ராஜா ரவி வர்மா, பாலசுப்பிரமணியம் ஆகிய இருவர் இணைந்து இசை அமைத்துள்ளனர்.அந்தந்த இடத்துக்கேற்ற இசையைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.

வரதராஜன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.சிறுவனின் பயணம்தான் படம் என்பதை உணர்ந்து அதை வரிசைக்கிரமமாய் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவு  செய்து இயக்கியிருக்கிறார் எஸ்பி பொன்சங்கர்.

கர்நாடகாவிலிருந்து தில்லி செல்ல தொடர்வண்டி ஏறி கேரளாவில் இறங்கி அங்கிருந்து  பல வாகனங்களில் நாயகனின் பயணம் இருக்கிறது.ஒரு சிறுவன் இப்படியெல்லாம் பயணிக்க இயலுமா? என்கிற கேள்வி படத்தின் பலவீனமாக இருக்கிறது.ஏமாற்றுக்காரர்கள்,தீவிரவாதிகள்,பாலியல் தொழிலாளிகள்,காவல்துறை அதிகாரிகள் ஆகியோரைப் பற்றிய பொதுப்புத்தித் தகவல்களை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்.

Comments (0)
Add Comment