அர்ஜுன் தாஸ்,காவலதிகாரி வேடத்துக்குக் கனகச்சிதமாக இருக்கிறார்.காவலதிகாரிக்கான மிடுக்கு ஒருபக்கம் தனிப்பட்ட வாழ்க்கை தன்னைக் குறைத்து மதிப்பிடும் அப்பாவால் மனமுடையும் மகனாக வெளிப்படுத்தும் உணர்வுகள் இன்னொருபக்கம் ஆகியனவற்றில் நன்றாக நடித்திருக்கிறார்.அவருடைய தனித்தன்மையான குரலை வைத்துக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் மாறுபட்டவையாக இருக்கின்றன. ஆனால் அவர் பேசும் வேகத்தில் வசனங்கள் புரிந்து கொள்வதில் பார்வையாளனுக்கு சிரமம் உள்ளது.
தமிழ்நாடு காவலதிகாரியாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன்,மிகை அதிகார மனநிலையில் கம்பீரம் காட்டியிருக்கிறார்.காணாமல் போகும் வேடமேற்றிருக்கும்நீரவ்,பொருத்
அனுபமாகுமார் மற்றும் கார்த்திக் குமார் நடிப்பும் நன்று.
நாயகனின் தாய் தந்தையாக நடித்திருக்கும் அர்ச்சனா சந்தோக்,படவாகோபி ஆகியோரும் வேடத்துக்குத்தக்க நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் ப்ரீத்தா ஜெயராமன்,கதையில் பயம் இருந்தாலும் காட்சிகளில் பரவசம் கொடுத்திருக்கிறார்.பல காட்சிகள் வியக்கவைக்கின்றன.
இசையமைத்திருக்கும் முஜீப் மஜீத்,கூடுதல் இசை கொடுத்திருக்கும் தி ஆர்டிஸ்ட் 404 ஆகியோர்,இந்தத் திரைக்கதைக்கு உயிர் இசைதான் என்பதை உணர்ந்து இசைத்திருக்கிறார்கள்.
படத்தைத் தொகுத்திருக்கும் விஜய் வெங்கடரமணன்,படபடப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள முயன்றிருக்கிறார்.
சண்டைப் பயிற்சி அமைத்திருக்கும் தினேஷ் சுப்பராயன் மற்றும் ஆக்ஷன் சந்தோஷ் ஆகியோர் அர்ஜுன் தாஸின் மதிப்பை உயர்த்தப் பயன்பட்டிருக்கிறார்கள்.
கதை மற்றும் திரைக்கதையை மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியே ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
இயக்கியிருக்கும் மதுமிதா,மனித உணர்வுகள் பற்றிய குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு மொத்தப்படத்தையும் நகர்த்தியிருப்பது பெரும்பலம்