தன்னை பெண் பார்க்க வந்தவரிடம் தனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை என சாவித்திரி சொல்வதில் தொடங்குகிறது 2.34 நிமிடங்கள் ஓடும் முன்னோட்டம் அவரின் விருப்பத்துக்கு மாறாக அந்த மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்க தாமரை இலை தண்ணீராய் அவர்கள் வாழ்க்கை காட்டப்படுகிறது. விரும்பாத வாழ்க்கை என்றாலும் தனது வேடிக்கையான சுபாவத்தால் அதை கடந்து செல்கிறாள் வழக்கறிஞர் சாவித்திரி.இந்த நிலையில் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண்ணின் கொடூரக் கொலையில் சாவித்திரியின் கணவன் குற்றவாளி ஆக்கப்படுகிறான். அவ்வழக்கில் இருந்து அவனைக் காப்பாற்ற தானே களமிறங்குகிறாள் சாவித்திரி. விருப்பமில்லாத கணவனின் விடுதலைக்காக தனது சீனியரையே எதிர்த்து நிற்கிறாள்.
ஆரம்பத்தில் கலகலப்பாகவும், பின்பு மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் வாதங்களால் காரசாரமாகவும் நகரும் முன்னோட்டம், சாவித்திரி தனது கணவனை மீட்டாளா என்ற கேள்வியை முன் வைத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது.