பாசமிகு மகன்,அன்பான காதலன்,ஆவேச வீரன் என்கிற பலவித உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வேடமேற்றிருக்கிறார் நாயகன் வெற்றி,எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரியாலயா,அழகாக இருக்கிறார்.அவருடைய புன்னகை அவருக்கு இன்னொரு அடையாளமாக மாறியிருக்கிறது
நேர்மையானவர் அதேநேரம் அப்பாவி ஆனால் அவர் வேலை செய்வது கடத்தல்காரரிடம் என்பது முரண்.அதை தன் நடிப்பால் மறக்கச் செய்கிறார் லிவிங்ஸ்டன்.
தாதாக்களாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷ் மற்றும் அரோல் டி சங்கர் ஆகியோர் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
காவலதிகாரியாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் மூர்த்தி கவனம் ஈர்க்கிறார்.இன்னொரு காவலதிகாரி அபிராமியும் நன்று.
கராத்தே வெங்கடேசனும் அவருடைய குழுவும் செய்யும் வேலைகள் பதற வைக்கின்றன.இதுபோன்ற வேடங்களுக்கெனவே படைக்கப்பட்டவன் நான் என்று நிரூபித்திருக்கிறார் கராத்தே வெங்கடேசன்.
ஜீவாரவியின் கதாபாத்திரம் கதையில் முக்கியப் பங்காற்றுகிறது.அதற்கேற்ப நடித்திருக்கிறார்.
சந்தோஷ்குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.காட்சிகளில் நேர்த்தி.இரவுக்காட்சிகள் மற்றும் பல காட்சிகளில் அவருடைய ஒளியமைப்பு ரசிக்க வைக்கிறது.
கவாஸ்கர் அவிநாஷின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் படத்துக்குப் பெரும்பலம் சேர்த்திருக்கிறார்.
சண்டைப்பயிற்சி இயக்குநர் மெட்ரோ மகேஷ்,நாயகன் வெற்றிக்கு அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் வெற்றிக்கு நற்பெயர் பெற்றுத்தரும் வண்ணம்அமைந்திருக்கின்றன.நாயகனு
எழுதி இயக்கியிருக்கிறார் தீரன் அருண்குமார்.கடத்தல்காரர்களுக்