விநியோகஸ்தர்7ஜி பிலிம்ஸ் சிவா தயாரிப்பில் உருவான இந்தப்படம் பிப்ரவரி 28 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப்படம் பிப்ரவரி 28 அன்று வெளியானது.இந்தப்படம் தயாரிப்பதற்காக வாங்கிய கடனை தயாரிப்பாளர் 7ஜி சிவா உரிய நேரத்தில் பைனான்சியருக்கு திருப்பிக் கொடுக்காததால் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை.
அதன்பின் சில நாட்கள் கழித்து மார்ச் 9 அன்று ‘சப்தம்’ படம் குறித்து பதிவிட்ட இயக்குநர் அறிவழகன்,
அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் தயாரிப்பாளர் 7ஜி சிவா செய்த குளறுபடிகள், நாணயமின்மை பற்றிய ஆதங்கம், விமர்சனம் என கூறப்பட்டது.
அவருக்குக் கடன் கொடுத்திருந்த புருசோத்தமன் என்பவர் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.இவர் 7ஜி சிவாவுக்கு சுமார் மூன்றே கால் கோடி கடன் கொடுத்திருக்கிறார்.
அந்தப்பணத்தை பட வெளியீட்டுக்கு முன்பு திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று சொன்ன 7ஜி சிவா சொன்னபடி நடந்து கொள்ளாததால் நீதிமன்றம் சென்றிருக்கிறார்.
அங்கு, இந்தப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை பெற்றிருக்கிற ரேவன்சா குளோபல் வென்ச்சர்ஸ் நிறுவனத்திடம் வரவேண்டிய தொகையில் இந்தக் கடனை முதலில் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அந்நிறுவனத்திடமிருந்து மொத்தத் தொகையையும் ஏற்கெனவே பெற்றுவிட்டோம் என்று தயாரிப்பாளர் தரப்பில் வாதிடப்பட்டிருக்கிறது.
அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்தால் அந்த வாதம் பொய்யென தெரிந்திருக்கிறது.
இன்னும் அந்நிறுவனத்திலிருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆறரை கோடி ரூபாய் கொடுக்க
ஏற்கெனவே இப்படத்தை இயக்கிய இயக்குநர் அறிவழகன், நாயகன் ஆதி ஆகியோர் பணத்தை இழந்ததோடு உழைப்பும் வீணானதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் வாங்கிய பணத்தை ஒழுக்கமாக திருப்பித் தராமல் நீதிமன்றம் வரை சென்று அவமானப்பட்டிருப்பதோடு படத்தின் டிஜிட்டல் ரிலீசிலும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதால் எல்லோரும் தயாரிப்பாளர் மீது குற்றம் சாட்டி பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.