சமூக பொறுப்புடன்” முதற்கனல்” திரைப்பட விமர்சனம்

தமிழ்சினிமாவில் மது, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய திரைப்படங்கள் சமீப காலமாக வரத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் இணைந்திருக்கும் திரைப்படம் “முதற்கனல்”
மருத்துவராகவேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்ந்து வரும் மாணவன்  தவறான நட்பின் காரணமாக போதைக்கு அடிமையாகிறான் அதிலிருந்து மீண்டு வருகிறானா என்பதே முதற்கனல் படத்தின் பிரதான திரைக்கதை. உணர்வுபூர்வமாகவும், விறுவிறுப்பாகவும் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார்இயக்குநர் ஆர். வெங்கடரமணன்.  பிரச்சாரத் தன்மை இல்லாமல், கதையின் போக்கில்ஒரு சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வை கொண்டு சேர்த்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்துள்ள அஸ்வின் விஸ்வநாதன், கதாபாத்திரத்தின் ஒவ்வொரு உணர்வையும் மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார். ஒரு இளைஞனின் கனவுகள், தவறுகள், மனவேதனை, மீண்டு வருவதற்கான போராட்டம் ஆகிய அனைத்தையும் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தியிருப்பது அவரது நடிப்பின் சிறப்பாக அமைகிறது.
ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரி கரன், யோகேஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களை முழுமையாக உணர்ந்து நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் கந்தசுவாமி கோபால், காட்சிகளின் மனநிலையை அழகாக பதிவு செய்து, திரில்லர் உணர்வை ரசிகர்களுக்கு முழுமையாகக் கடத்துகிறார்.
இசையமைப்பாளர் மீரா லாலின்பின்னணி இசை ஒவ்வொரு சஸ்பென்ஸ் தருணத்தையும் மேலும் விறுவிறுப்பாக்கி, உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு கூடுதல் அழுத்தத்தை அளிக்கிறது.எடிட்டர் திஸ்யன் சாரதி காட்சிகளை தேவையான வேகத்தில் தொகுக்க முயற்சித்திருக்கிறார்.

மொத்தத்தில்,  திரைப்படமாக மட்டுமல்லாமல், சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கியமான விழிப்புணர்வு செய்தியை வலுவான திரைக்கதையுடனும், சிறப்பான நடிப்புகளுடனும், தரமான தொழில்நுட்ப அம்சங்களுடனும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பாராட்டுக்குரிய படைப்பாக முதற்கனல் திகழ்கிறது”.

Comments (0)
Add Comment