சம்பள பிரச்சினையால் விஐய் படத்தை நிராகரித்த சத்யராஜ்

எச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ‘விஜய் 69’ என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.பெங்களூரைச் சேர்ந்த கேவிஎன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தின் பூஜை செப்டம்பர் 4 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது.ஒரு பாடலைப் படமாக்கியதோடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில்,இப்படத்தில் இருக்கும் முக்கிய வேடமொன்றில் நடிக்க நடிகர் சத்யராஜை அணுகியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே  தலைவா,மெர்சல் உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் நடித்திருக்கிறார் சத்யராஜ்.
ஆனால் விஜய் 69படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் சத்யராஜ்.

அதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது

அவற்றில் ஒன்று…

விஜய் அரசியல் கட்சி தொடங்கிவிட்டார்.இந்தப்படத்தில் நேரடியாகவோ இல்லாவிட்டால் மறைமுகமாகவோ அவரையும் அவருடைய கட்சியையும் போற்றிப் புகழும் வண்ணம் வசனங்களோ காட்சிகளோ இடம்பெறும் அல்லது பின்னணியில் அவருடைய கட்சிக் கொடியை, பதாகையை முன்நிறுத்தக் கூடிய காட்சிகள் வைக்க கூடும். அதனை தவிர்க்கவே சத்யராஜ் நடிக்க மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

இது உண்மையா? என சத்யராஜ் வட்டாரத்தில்விசாரித்தால் வேறொரு  காரணம் சொல்லப்படுகிறது.அது என்னவெனில்…

இந்தப்படத்தில் நடிக்கக் கேட்டு இயக்குநர் எச்.வினோத் பேசினார். படத்தின் கதையும் அதில் சத்யராஜ் சார் கேரக்டரும் நன்றாகவே இருந்தன.சாருக்கும் அதில் நடிக்க விருப்பம்தான்.ஆனால்,சம்பள விசயம் ஒத்துவரவில்லை.சார் இப்போது நடிக்கும் படங்களில் வாங்கும் சம்பளத்தைக் கேட்டார்.அதற்கு எங்களிடம் அவ்வளவு பட்ஜெட் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.அதனால் சார் நடிக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

Comments (0)
Add Comment