தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை இயக்கும் இயக்குநர்கள் குறைந்து வருகின்றார்கள். முதல் படத்தில் வெற்றி பெரும் பெரும்பான்மையான இயக்குநர்கள் இரண்டாவது படத்தில் சராசரி வெற்றியை கூட தக்க வைக்க தடுமாறுகின்றனர்.
‘டிராகன்’ இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு அப்படியான அட்வான்ஸ் வாய்ப்பைக் கொடுத்துள்ளார் சிலம்பரசன். ‘டிராகன்’ படம் வெளிவருவதற்கு முன்பே அஷ்வத்தின் திறமையை அறிந்து தனது 51வது படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார். சிலம்பரசன் கணித்ததை போலவே ‘டிராகன்’ படமும் பெரும் வெற்றி பெற்று 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இதனால், சிலம்பரசன் – அஷ்வத் மாரிமுத்து இணையும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘ஓ மை கடவுளே, டிராகன்’ என அடுத்து சிம்புவின் 51வது படத்தையும் வெற்றிகரமாகக் கொடுத்து அஷ்வத் ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என திரையுலகினரும் எதிர்பார்க்கிறார்கள். சிலம்பரசன் தொலைநோக்கு பார்வை பலிக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.