சூர்யா சேதுபதி நடிக்கும் ஃபீனிக்ஸ் முன்னோட்டம் எப்படி?

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நாயகனாகஅறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் முன்னோட்டம் 27.06.2025 அன்று வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது மகன் சூர்யா சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை சண்டைப் பயிற்சி இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார். ஆக்‌ஷன் – ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். 2025ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள படத்தின் முன்னோட்டத்தைபடக்குழு வெளியிட்டுள்ளது.
முன்னோட்டம் எப்படி?
 முன்னோட்டத்தின்கலர் டோன், இது எப்படியான படம் என்பதை கூறிவிடுகிறது. படு சீரியஸாக செல்லும் முன்னோட்டம் முழுக்கவே அதிரடி, ஆக்‌ஷன், ரத்தம், வன்முறை தெறிக்கிறது. சூர்யா சேதுபதி படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக மெனக்கெட்டிருப்பார் என்பதை உணர முடிகிறது.
சாம் சி.எஸ் பின்னணி இசை முன்னோட்டத்திற்கு விறுவிறுப்பை கூட்டுகிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவின் தரம் பளிச்சென தெரிகிறது. அத்துடன் படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன் என பிரபல நடிகர் பட்டாளமும் உள்ளது. முன்னோட்டத்தில் இருக்கும் விறுவிறுப்பு படத்திலும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
Comments (0)
Add Comment