’ஜனநாயகன்’ படத்தில் விஜய் நடித்து வரும் காட்சிகளின் படப்பிடிப்பு மே மாதத்துடன் முடிவடையவுள்ளது.
2026 பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது ‘ஜனநாயகன்’. இப்படத்தின் ஓடிடி உரிமையைக் வாங்கியுள்ளது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம். இந்நிறுவனம் இந்தாண்டு வெளியீட்டிற்கான அனைத்து படங்களையும் முடிவு செய்துவிட்டது. இதனால் அடுத்த ஆண்டு வெளியீடு என முடிவு செய்தால், ஓடிடி உரிமையினை வாங்கிக் கொள்வதாக கூறி இருக்கிறது.
நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துடனான ஓடிடி ஓப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது. தற்போதைய சூழலில் ஓடிடி உரிமை விற்பனை என்பது மிகவும் கடினமாக இருக்கிறது.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், கவுதம் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.