மே 1 ஆம் தேதி சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படத்துடன் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவராஜ் கணேசன் தயாரித்து, அவரே தமிழகத்தில் வெளியிட்டார். இந்த சின்னப் படத்துக்கு ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார் என்று பலரும் பேசினார்கள்.
தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் வசூலில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முதல் நாளில் 2.5கோடி ரூபாய்வசூல் செய்த இப்படம், இதுவரை தமிழகத்தில் மட்டும் 35 கோடி ரூபாய்க்கும்
இப்படியான வசூலின் மூலம் தயாரிப்பாளருக்கு 2 மடங்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்த படமாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் வெளியான முதல் நாள் கிட்டத்தட்ட இரண்டரைக் கோடிதான் வசூலித்தது. என்னுடைய ஒரு படம் மொத்தமாகவே இரண்டரைக் கோடிதான் வசூல் செய்தது. ஆக என்னுடைய ஒரு படம் இரண்டரைக் கோடிக்கும் ஓடி இருக்கிறது. நான் நடித்த படங்களில் ‘சுந்தர பாண்டியனும்’, ‘குட்டிப்புலியும்’தான் அதிக வசூல் செய்த படங்கள். ஆனால் இன்று இந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் அதனை முறியடித்திருக்கிறது. அதனால் இனி வருபவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுங்கள். ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் உங்களை எல்லோருக்கும் எப்படிப் பிடித்ததோ அதேபோல இந்தப் படத்தில் வரும் தர்மதாஸ் கதாபாத்திரமும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொன்னார்கள்.அதே மாதிரி நான் தியேட்டருக்குச் சென்று பார்த்தபோது நல்ல வரவேற்பு இருந்தது. நல்ல படம் கொடுத்தால் குடும்பத்துடன் தியேட்டருக்கு மக்கள் வருவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். ‘டூரிஸ்ட் பேமிலி’ எங்கள் வெற்றி அல்ல. இது தமிழ் சினிமாவின் வெற்றி என்று நான் கருதுகிறேன். இன்னும் பல குடும்பப் படங்கள் வர வேண்டும்” என்று கூறினார்.