இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்துக்குப் பிறகு அதியன் ஆதிரை இயக்கத்தில் தயாராகி வந்தப் படம் ‘தண்டகாரண்யம்’.
தற்போது இப்படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
அதியன் ஆதிரையின் முந்தைய படத்தைப் போலவே, இப்படத்தையும் தயாரித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித், இப்படத்தில் தினேஷ், கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக பிரதீப் காளிராஜா, இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள்.
இப்படத்தினைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தினையும், தானே இயக்கி வரும் படத்தினையும் தயாரித்து வருகிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.