நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாவனா நடிப்பில் கதாநாயகியை மையப்படுத்திய திரைக்கதையில் வெளியாகி இருக்கும் படம்தி டோர், அமானுஷ்ய நிகழ்வுகள் அதன் பின்னணி பற்றி ஆராயும் திகில் படம்.
கட்டிடக்கலை நிபுணர் பாவனா புதிய கட்டிடம் கட்டும் வேலையை எடுக்கிறார்.அந்தக் கட்டிடப் பணிக்காக பழமையான சிறு கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது.
கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாவனாவின் தந்தை விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைகிறார்.
இதனால், சில மாதங்கள் வேலை தடைபடுகிறது. மீண்டும் தன் பணியை பாவனா தொடங்கும் போது, அவரைச் சுற்றி சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன.அவை என்ன? அவற்றின் விளைவென்ன? என்கிற கேள்விகளுக்கான விடைகள் தான் திடோர் படத்தின்திரைக்கதை.
அமானுஷ்ய நிகழ்வுகளால் பயப்படும் நேரத்தில் அவருடைய கண்கள் பெரிதும்உதவியிருக்கின்றன.ஒவ்வொரு முடிச்சு விழும்போதும் அதை அணுகும் நேரங்களில் பொறுப்பாக நடித்திருக்கிறார்.
கணேஷ் வெங்கட்ராமனுக்கு காவல்துறை அதிகாரி வேடம்சரியாகச் செய்திருக்கிறார்.
ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா என நிறைய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.அவர்களும் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
திகில் படமென்றாலே இருட்டாக அல்லது பாதி இருட்டாக இருக்கும் என்பதை மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கெளதம்.ஜி.நல்ல வெளிச்சத்தில் காட்சிகள் நிகழ்கின்றன.
வருண் உண்ணியின் பின்னணி இசை படத்தின் திரைக்கதைக்கேற்ப அமைந்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் அதுல் விஜய், பார்வையாளர்களுக்கு எந்தத் தொந்தரவும் தராமல் காட்சிகளை கச்சிதமாக கோர்த்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயதேவ்.என்ன எடுக்க வேண்டும்? அதை எப்படிக் கொடுக்க வேண்டும்? என்கிற தெளிவுடன் இயங்கியிருப்பதால் படம் சுவாரசியமாக நகர்கிறது.
இதுபோன்ற திகில் படங்களில் சிக்கல்களின் முடிச்சவிழும் நேரத்தில் சலிப்பும் சோர்வும் ஏற்பட்டுவிடும்,அப்படியில்லாமல் கடைசிவரை படம் வேகமாகப் பயணிப்பது அவருடைய பலம்.