‘யாத்திசை’ இயக்குநரின் புதிய படம்: பிரிட்டிஷ் காலத்து வரலாற்றுக் கதையா? 

யாத்திசை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் ஜே. கமலகண்ணன் தயாரித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத  இந்தப் படத்தின்மீது எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
ஐஎன்ஏ அதிகாரியாக…
இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படக்குழுவின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் பிரதிபலித்துள்ளது. இயக்குநரின் பிரம்மாண்டமான கதையை திரையில் உயிர்ப்பிக்க, அனைத்துத் துறைகளும் இணைந்து பணியாற்றியுள்ளன.
சசிகுமார் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
உயர்ந்த காட்சித்தரம்
தற்போது  படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. திரைப்படத்தின் காட்சித்தரத்தை உயர்த்தவும், கதையை செழுமைப்படுத்தவும் பிரம்மாண்டமான VFX பணிகள் இடம்பெறவுள்ளதால், பின்னணி வேலைகள் மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலம்
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் சசிகுமார் மிகவும் வலிமையான மற்றும் தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது திரைப்படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

Comments (0)
Add Comment