ராணுவ அதிகாரியாக நடிக்கும் லெஜெண்ட் சரவணன்

 

லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தொழிலதிபர் அருள் சரவணன். அந்த படத்தில் அவரது நடிப்பு கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தனது இரண்டாவது படத்தை தயாரித்து நடித்திருக்கிறார் அருள் சரவணன் என கூறப்படுகிறது.

‘கொடி, கருடன்’  படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் அவரது இரண்டாவது படமாக நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக இறுதி கட்ட  பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.40 கோடி பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே முதல் படத்தில் விஞ்ஞானியாக நடித்த லெஜண்ட் சரவணன் இந்த படத்தில் ராணுவ கமாண்டர் வேடத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்திற்கு ‘லீடர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை ஏப்ரல் 3ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.”

Comments (0)
Add Comment