விடாமுயற்சியை தொடரும் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள” லீடர்”

தமிழ்நாட்டில்பல்வேறு வியாபாரங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன்
தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் 2022 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார் சரவணன். அப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். அப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கி இருந்தனர். வணிக ரீதியாக படம் வெற்றி பெறவில்லை. சரவணன் கதை நாயகனாக நடித்துள்ள இரண்டாவது படம் தற்போது தயாராகியுள்ளது.
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வு சென்னை கமலா திரையங்கில் மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்றது.
ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார், ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தை எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ‘லீடர்’ வெளியாகிறது.
இந்நிலையில், ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசர் வெளியாகியுள்ளது.
படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் பேசியதாவது…..

அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம்தான் லீடர்.தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையைச் சுற்றி கதை சுழல்கிறது. இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம்.’லீடர்’ அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன் என்றார்.

Comments (0)
Add Comment