திரையரங்கு உரிமையாளர்களின் தன்னிச்சையான முடிவை எதிர்க்கும் சுல்த்தான் தயாரிப்பாளர்

விஜய் நடித்தமாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான இரண்டு வாரங்களில் இணைய ஒளிபரப்பு உரிமை கொடுத்ததால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன.அதனால், ஒரு படம் வெளியாகும் போதே, சிறிய படங்கள் 30 நாட்கள் வரையும் பெரிய படங்கள் 50 நாட்கள் வரையிலும் இணையத்துக்குக் கொடுக்கமாட்டோம் என்கிற உறுதிமொழிக் கடிதம் கொடுக்க வேண்டுமென்றும் அப்படிக் கொடுத்தால்தான் படங்கள் திரையிடப்படும் என்றும் திரையரங்கினர் அறிவித்துள்ளனர்.இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆனாலும் இந்த நடைமுறைப்படி உறுதிமொழிக் கடிதம் கொடுக்கும் படங்கள் மட்டுமே திரையிடப்படும் என்று விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர்.இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவருடைய டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது….

இந்த விசயத்தில் சங்கங்களுக்கிடையேயான பரஸ்பர ஒப்புதலால் மட்டுமே சரியான முடிவை அடைய முடியும்.திரைப்படத்துறையின் முழு செயல்களையும் ஒரு சங்கம் மட்டுமே தீர்மானிக்க முடியாது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் விதத்தைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்திற்கான சரியான பாதையை அமைப்பது எல்லோருடைய கடமை என்பதை உணரவேண்டும் என்று கூறியுள்ளார்.திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே 30 நாட்களில்OTTயில் வெளியான முதல் தமிழ் படம்” கைதி” அப்போது இது போன்ற சர்ச்சை எதுவும் எழவில்லை இதுசம்பந்தமாக படத்தின் தயாரிப்பாளர் S.R.பிரபுவிடம் கேட்டபோது படத்தை தயாரிக்கின்ற தயாரிப்பாளர் தனது படத்தை எப்படி மார்க்கெட் செய்ய வேண்டும் என்கிற உரிமை இருக்கிறது எனது படங்களுக்கு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்கிறபோது 30 நாட்களில்OTTயில் படம் வெளியிடப்படும் அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே நான் ஒப்பந்தம் செய்வதை வழக்கமாக கடைப்பிடித்து வருகிறேன்கோடிக்கணக்கில் முதலீடு செய்து தயாரிக்கின்ற தயாரிப்பாளர் படத்தை வெளியிட மற்றவர்களுக்கு கடிதம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை புதிய வியாபார வாய்ப்புகள் உருவாகின்ற போது அதனை எல்லோருக்கும் பயன்படுகிற வகையில்திரைப்பட துறைசார்ந்த சங்கங்கள் ஒன்று கூடி முடிவு எடுக்க வேண்டும் அதை தவிர்த்துவிட்டு தனி நபர்கள், சங்கங்கள் தன்னிச்சையாக முடிவுகளை அறிவிப்பது சரியல்ல என்றார்

#dreamwarriorpictures
Comments (0)
Add Comment