சினிமா முத்தரப்பு கூட்டம் கேபிள் TV ஊழலை திசைதிருப்பவா

தமிழ் சினிமாவில் கடந்த இருவாரங்களாக கேபிள் TVயில்

தமிழ் சினிமா பாடல்களை ஒளிபரப்புவதற்கான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பான குற்றசாட்டுகள் தயாரிப்பாளர்கள் தரப்பில் எழுப்பபட்டு வருகிறது
இந்த தவறுகள் நடப்பதற்கு காரணமாகவும், உடந்தையாகவும் சங்கத்தின்முன்னாள் நிர்வாகிகள்இருந்ததாக குற்றசாட்டை முன்வைத்து தயாரிப்பாளர்கள் இடம்பெற்றுள்ள வாட்ஸ்அப் குழுவில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் அது சம்பந்தமான ஆவணங்களையும், ஆடியோ பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
குற்றம்சுமத்தப்பட்டவர்களிடமிருந்து நேரடியான பதில் இதுவரைஇல்லை ஆனால் அவர்களுக்கு வேண்டியவர்கள் எனக்கு எதிராக, அவமானகரமாக ஆடியோ பதிவுகளை வெளியிட்டு வருவதாக சிங்காரவேலன் கூறிவருகிறார் இந்த சூழ்நிலையில்கொரானாவைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள், நிறுத்திவைக்கப்பட்டுள்ள படப்பிடிப்புகளை மீண்டும் தொடர்வதற்கு அரசிடம் அனுமதி பெறுவதற்காகவும், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் 6.7.2020 அன்று மாலை நடைபெற்றது
தயாரிப்பாளர்கள் தரப்பில் பாரதிராஜா,கலைப்புலிதாணு, அம்மாகிரியேஷன்ஸ் சிவா
எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன், சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார், தேனப்பன், ஜே.எஸ்.கே .சதீஷ்
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் திருப்பூர் சுப்பிரமணி. செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோவன், உட்லண்ட்ஸ் வெங்கடேஷன், திருச்சி மீனாட்சிசுந்தரம், திருச்சி ஸ்ரீதர்
திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தரப்பில் சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் மன்னன் ஆகியோர் பங்கேற்றனர்

நமக்குள் தொழில்ரீதியாக கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் முத்தரப்பும் இணைந்து நமது தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு தமிழக அரசிடம் முறையிட வேண்டும் என விவாதத்தை தொடங்கிவைத்த திருப்பூர் சுப்பிரமணி தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டால் மட்டுமே சினிமாவில் பிற வேலைகளை தொடங்க உதவிகரமாயிருக்கும் என கூறியுள்ளார்

இயக்குனர் பாரதிராஜா தன் வாழ்நாள் கனவான தமிழ் திரைப்பட வர்த்தக சபை மீண்டும் செயல்பட அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதை பிரதானமாக வலியுறுத்தியுள்ளார்

தயாரிப்பாளர்கள் தரப்பில்படப்பிடிப்பை மீண்டும்தொடங்குவதற்கு அரசிடம் அழுத்தம் கொடுத்து அனுமதி

பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதுஅரசிடம் கொடுக்கப்படவுள்ள கோரிக்கை மகஜரை தயாரிக்கும் பொறுப்பு சங்கத்தின் முன்னாள் பொருளாளர்S.R.பிரபு, தனஞ்செயன் இருவரிடமும் வழங்கப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவில் வியாபாரம், திரையிடல் இவற்றை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ள கோவை விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் ராஜமன்னார், மதுரை விநியோகஸ்தர்கள் சங்க  தலைவர் அழகர்சாமிதிருநெல்வேலி
மணிகண்டன், வேலூர் சீனிவாசன், பைனான்சியர் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக தன்மை கொண்ட மதுரை அன்புசெழியன்,
நடைபெறவுள்ள தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேனாண்டாள் முரளி மற்றும் முன்னாள் காசாளர் ராதாகிருஷ்ணன்ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்கேற்காதது தமிழ் திரைப்பட  வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது மத்திய அரசின் அதிகாரவரம்பிற்குட்பட்டது மாநில அரசிடம் மகஜர் கொடுப்பதால் எந்த பலனும் இல்லை என்பதுடன் திரையரங்க உரிமையாளர்கள் கடந்த நான்கு வருடங்களாக மாநிலஅரசிடம் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்கிற

விமர்சனம் திரையரங்கு
வட்டாரத்தில் எழுப்பபட்டு
வருகிறது

ஆலோசனை கூட்டத்திற்கு பின் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணி ஆலோசனை கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பதை தன் சங்க உறுப்பினர்களுக்கு ஆடியோ பதிவின் மூலம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்கள் தரப்பில் கலந்துகொண்டவர்கள் அதுபோன்று ஏன் வெளியிடவில்லை என்கிற விவாதம் தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது

இந்த ஆலோசனைக் கூட்டம் தற்போது தயாரிப்பாளர்கள் மத்தியில் கேபிள் TV ஊழல் பிரதானமாக விவாதிக்கப்பட்டு வருகிறது இதனை திசைதிருப்பவே முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு இல்லாத சூழ்நிலையில் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது அதனால் ஆலோசனையில் பங்கேற்க பலர் மறுத்துவிட்டனர்
இருந்தபோதிலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிமூலம் இயக்குனர் பாரதிராஜாவை சம்மதிக்க வைத்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்த கலைப்புலி தாணுவே காரணம் என்கின்றனர் சிறுபட தயாரிப்பாளர்கள் இருந்தபோதிலும் எந்தவொரு தீர்க்கமான முடிவையும் ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்கின்றனர் தயாரிப்பாளர்கள்
அண்டைமாநிலங்களான கேரளா, கர்னாடகா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில்திரைப்பட தொழிலை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர்களும், நடிகர்களும், திரையரங்க உரிமையாளர்களும் இணைந்து முதல்வர்களை சந்தித்துவரும் சூழ்நிலையில்
தமிழ் சினிமாவில் கோஷ்டி மனப்பான்மை, நாட்டாமை தனம் , தான் என்கிற ஆதிக்க மனோநிலை எல்லோரிடமும் ஆட்சி செய்வதால் தமிழ் சினிமா தடுமாறி வருகிறது.
Tamil Cinema
Comments (0)
Add Comment