பேசியே வம்புல மாட்டுகிறார் விஷால்- இயக்குநர்மிஷ்கின் கிண்டல்

துப்பறிவாளன் படம் வெற்றி

பெற்றதை தொடர்ந்து மிஷ்கின் – விஷால் கூட்டணியில் அதன் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது லண்டனில் படம் சம்பந்தமான வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு படத்தை இயக்குவதில் இருந்து மிஷ்கின் விலகினார். இயக்குனர் பொறுப்பை ஏற்ற விஷால் அப்படியே இந்த படத்தை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் விஷால் ஒரு பேட்டியில் இனி மிஷ்கின் உடன் படம் பண்ண மாட்டேன். அவர் எனக்கு செய்தது துரோகம் என கூறியிருந்தார்.

இதுபற்றி மிஷ்கின்  கூறியதாவது  இந்த பிரச்சினையை அப்படியே விட்டு விடலாம் என்று தான் நினைக்கிறேன். ஆனால் பேசி பேசியே விஷால் மாட்டிக்கிறார் அவரது பேட்டியை பார்த்தேன் காமெடியாக இருந்தது. என் கதையையே கொடுத்தவன், என் தம்பியை தர மாட்டேனா. என் தம்பி நடித்தால் பணம் வரும், அதை ஏன் நான் தடுக்க வேண்டும். நான் படம் பண்ண மாட்டேன் என்று சொன்னதும் விஷால் தலையில் கையை வைத்தது உண்மை தான். எந்த சூழ்நிலையில் அப்படி சொன்னேன் தெரியுமா. என் உதவியாளர்களை மோசமாக நடத்தி ஊருக்கு அனுப்பி வைத்தனர். பிறகு என் மேலாளரையும் அதேப்போன்று நடத்தி அனுப்பி வைத்தனர். இப்படியே செய்தால் எனக்கு படமே வேண்டாம் என்றேன். உடனே நான் முக்கியமா, உதவியாளர்கள் முக்கியமா என விஷால் கேட்டார். நான் என் உதவியாளர்கள் தான் முக்கியம் என கூறி வந்துவிட்டேன் என்றார்.

#vishal
Comments (0)
Add Comment