துப்பறிவாளன் படம் வெற்றி
இதுபற்றி மிஷ்கின் கூறியதாவது இந்த பிரச்சினையை அப்படியே விட்டு விடலாம் என்று தான் நினைக்கிறேன். ஆனால் பேசி பேசியே விஷால் மாட்டிக்கிறார் அவரது பேட்டியை பார்த்தேன் காமெடியாக இருந்தது. என் கதையையே கொடுத்தவன், என் தம்பியை தர மாட்டேனா. என் தம்பி நடித்தால் பணம் வரும், அதை ஏன் நான் தடுக்க வேண்டும். நான் படம் பண்ண மாட்டேன் என்று சொன்னதும் விஷால் தலையில் கையை வைத்தது உண்மை தான். எந்த சூழ்நிலையில் அப்படி சொன்னேன் தெரியுமா. என் உதவியாளர்களை மோசமாக நடத்தி ஊருக்கு அனுப்பி வைத்தனர். பிறகு என் மேலாளரையும் அதேப்போன்று நடத்தி அனுப்பி வைத்தனர். இப்படியே செய்தால் எனக்கு படமே வேண்டாம் என்றேன். உடனே நான் முக்கியமா, உதவியாளர்கள் முக்கியமா என விஷால் கேட்டார். நான் என் உதவியாளர்கள் தான் முக்கியம் என கூறி வந்துவிட்டேன் என்றார்.