பயணிகள் கவனத்திற்கு – சிறப்பு பார்வை

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும்வெளியாகும்படங்களில் வணிகரீதியாக வெற்றிபெற்றாலும் இல்லை என்றாலும் தமிழ் சினிமா தவிர்க்க முடியாத படங்கள் என எல்லா வருடங்களிலும் ஒரு பட்டியல் இருக்கும் அந்த வரிசையில் இந்த வருடம் செல்பி, டாணாக்காரன் படங்களை தொடர்ந்து” பயணிகள் கவனத்திற்கு” படம் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் அரசியல், சினிமா, இயற்கை பாதுகாப்பு என மற்ற மாநில மக்களிடம் இருந்து மாற்றி யோசிப்பதுடன் அதனை சாதித்தும் காட்டுவார்கள் கேரள மக்கள் அதனால்தான் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசை விமர்சனம் செய்யும் அரசியல் சினிமா, யதார்த்த சினிமாக்களை உயிர்ப்புடன் வழங்கி தங்கள் தனித்தன்மையை நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது மலையாள திரையுலகம் அங்கிருந்துதான் பல்வேறு படங்கள் பிறமொழிகளில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது

மலையாளத்தில் 2019ம் ஆண்டில் வெளிவந்த ‘விக்ரிதி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் பயணிகள் கவனத்திற்கு திரைப்படம்
ஆன்ராய்டு கைபேசி வந்த பின் தமிழகத்தில் விபரம் தெரிந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை 24 மணி நேரத்தில் தூங்கிய நேரம் போக மற்ற நேரங்களில் அவர்கள் அதிக நேரத்தை செலவிடுவது மொபைல் போனில்தான் தகவல்தொழில் நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக வாட்சப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மூன்றும் மனிதர்களை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது

இன்றைய சமூக வலைத்தள யுகத்தில் எதையும் தீர விசாரிக்காமல் எதிர்விளைவுகளை பற்றி யோசிக்காமல கண்ணால் பார்ப்பதை வைத்து உடனடியாக பதிவிடும் ஆர்வக் கோளாறுகளால் சம்பந்தப்பட்டவர்கள்எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் உயிரோட்டமாய் சமரசமின்றி பதிவு செய்திருக்கும்படம் “பயணிகள் கவனத்திற்கு”

இந்திய சினிமாவில் யதார்த்தக் கதைகளத்தில் நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து வெற்றிபெறுவதில் முதலிடம்மலையாளத் திரையுலகத்திற்கு உண்டு. இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா? அதனை திரைப்படமாக தயாரிக்க இயலுமாஎன்று கேட்கத் தோன்றும். அப்படி ஒருபடம்தான் ‘விக்ரிதி’. மலையாளப் படத்தின் உயிரோட்டத்தை அப்படியே தமிழில் பயணிகள் கவனத்திற்கு படத்தில் பதிவுசெய்திருக்கிறார் இயக்குனர் சக்திவேல். இந்தப் படத்தில் நடிகர் விதார்த் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ்.பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். காது கேட்காது,வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான விதார்த் ஒரு கல்லூரியில் நூலகராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவியான லட்சுமி சந்திரமெளலியும் இவரைப் போலவே மாற்றுத் திறனாளிதான்.

இவர்களுக்கு பையன், பெண் என்று இரண்டு குழந்தைகள். பையன் பள்ளியில் படிக்கிறான். கூடவே ஒரு கால்பந்து அணியில் விளையாடி வருகிறான். கொஞ்சம் முன் கோபி. பெண்ணும் பள்ளியில் படிக்கிறாள்.
மற்றொரு கதாபாத்திரமாக வரும்கருணாகரன் துபாயில் இருந்து விடுமுறையில் சொந்த ஊர் திரும்புகிறார். தான் பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் மனதுக்குள்ளேயே காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். இந்தத் திருமண நிச்சயத்தார்த்தமும் முடிந்து, கல்யாணத்திற்குதேதியும் குறித்துவிட்டார்கள்
விதார்த்தின் மகளுக்கு உடல்நலமில்லாமல் போகமருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் இரண்டு நாட்கள் மகள் அருகில் இருந்து கவனித்துக் கொண்ட விதார்த், மெட்ரோ ரயிலில் வீடு திரும்புகிறபோது களைப்பின் காரணமாக ரயிலிலேயே தூங்கிவிடுகிறார்.
அதே ரயிலில் அந்த நேரத்தில் பயணித்துக் கொண்டிருந்த கருணாகரன், இதைப் பார்த்துவிட்டு அதை புகைப்படம் எடுத்து தான் இருக்கும் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் போடுகிறார். அந்த வாட்ஸ் அப் குரூப் அட்மின், அந்தப் புகைப்படத்தை தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா என சமூக வலைத்தளங்களில் பதிவிட
வைரலாகிறது. விதார்த் குடித்துவிட்டு மெட்ரோ ரயிலில் சக பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் படுத்திருந்ததாகச் சொல்லி அவரைக் கடுமையாகத் திட்டியும், விமர்சித்தும், கண்டித்தும் கமெண்ட்டுகள்சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய தொலைக்காட்சி தலைப்புச் செய்தியாக மாறுகிறார் அந்த பதிவின் உண்மை தன்மை பற்றி அறிய யாரும் முயற்சிக்கவில்லை
இதனால் மொத்த குடும்பமும் மன அழுத்தத்திற்கும் படிக்கிற பள்ளியில்சக மாணவர்களின் கேலிக்கும், ஆளாகிறான் விதார்த்தின் மகன். அப்பாவிடம் ஆத்திரப்படுகிறான் விதார்த் வேலை செய்யும் கல்லூரியிலும் அவரை சில நாட்கள் கல்லூரிக்கு வர வேண்டாம் என்று சொல்லியனுப்புகிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் அவரை நோக்கி கேலிகளும், கிண்டல்களும் மொத்த குடும்பமும் மன அழுத்ததிற்கு உள்ளாகிறது இதுபற்றி எதுவும் அறியாத கருணாகரன்தன் கல்யாண வேலையில் தீவிரமாக இருக்கிறார் கருணாகரன். விதார்த்தின் நிலையறிந்த அவர் குடியிருக்கும் வீட்டு ஓனரின் மகள் தான் வேலை செய்யும் செய்தி நிறுவனம் வாயிலாக விதார்த்தின் உண்மை நிலையை ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர்கிறார்
விதார்த் மீது இருந்த தவறானபார்வை மாறுகிறது
பலரும் விதார்த்தை காவல்துறையில் புகார் கொடுக்கச் சொல்கிறார்கள் அதன்படி விதார்த்புகார் கொடுத்த பின் வேகமெடுக்கிறது திரைக்கதை
கருணாகரனுக்கு இது தெரிய வர பதட்டம், பயம் போலீஸார் தன்னைக் கைது செய்துவிடுவார்களோ.. துபாய்க்கு தான் திரும்பிப் போக முடியாதோ என்பதை இயல்பாக தன் நடிப்பில் பார்வையாளனுக்கு கடத்தி படம் பார்ப்பவர்களை அடுத்து என்ன என்கிற பரபரப்பு மனநிலைக்கு கொண்டுவருகிறார்
மைனா படத்திற்கு பின் விதார்த் நடிப்பில் வெளியான படங்கள் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை ஆனால் அவர் கதைநாயகனாக நடித்து வெளியான படங்கள் படைப்புரீதியாக பாரட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வருகிறது பயணிகள் கவனத்திற்கு படத்தில் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுதிறனாளியாக இதைவிட சிறப்பாக நடிக்க முடியாது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் தனது மேம்பட்ட நடிப்பால் பார்வையாளனுக்கு உணர்த்தி பரிதாபத்தை வாரிக்குவிக்கின்றார் விதார்த் கிளைமாக்ஸ் காட்சியில் மன்னிப்பதுதான் சிறந்த தண்டனை என்பதை அவர் சைகையில் வெளிப்படு்த்தும் காட்சியில் படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் மனதை 100% கொள்ளை கொள்கிறார் விதார்த்
தெய்வங்களை தேடி கோவிலுக்கு போக வேண்டாம் மனித ரூபத்தில் நம்மத்தியில்வாழ்கிறது என்பதை வசனங்களால் சொல்லாமல் விதார்த்தின் ஆளுமைமிக்க நடிப்பில் உணர்த்துகிறார் இயக்குநர் சக்திவேல்
கருணாகரனின் திரையுலக பயணத்தில் அவரின் சிறந்தவெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குநர்ஆர்வக்கோளாறில் உண்மை என்ன என்பதை அறியாமல் எடு்த்தேன், கவிழ்த்தேன் என்று முடிவெடுத்து புகைப்படத்தை பதிவுசெய்துவிட்டு பின்பு இவர் படும் அல்லல்தான் படத்தின் உயிர் நாடி.
பயணிகள் கவனத்திற்குபடம் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும்
இதை பதிவு செய்யலாமா என்று யோசிக்கவைக்கும் வகையில்தனது பயந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார் கருணாகரன். இடைவேளைக்குப் பின்னான அவரது காட்சிகள் அனைத்திலும் பிரேம் பை பிரேம் கருணாகரன் காட்டும் பயம்தான் திரைக்கதையின் முதுகெலும்பு
விதார்த் மனைவியாக நடித்திருக்கும்லட்சுமி பிரியாவும் காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் தனது நடிப்பையும் செவ்வனே செய்திருக்கிறார். எந்தக் கோலத்தில் இருந்தாலும் தானும் சீரியலில் மூழ்கும் சாதாரண பெண் என்பதைக் காட்டும்விதத்தில் இருக்கும் இவரது கதாபாத்திரம் ஒரு சுவாரஸ்யம்தான்.
படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும்தங்களது கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை குறையின்றி வழங்கி இருக்கிறார்கள்காவல்துறை அதிகாரிபிரேமின் கதாபாத்திரம் வித்தியாசமானது
கவிதாலயா’ கிருஷ்ணன் விதார்த்தின் பையனுக்கு புத்திமதி சொல்லி விதார்த்துடன் சேர்த்து வைக்கும் காட்சி மிக யதார்த்தம்..!
மலையாளப் படத்தின் ரீமேக் என்பதால் தமிழுக்கேற்றாற்போல் வசனங்கள்மட்டுமே மாறியிருக்கிறதுகதாநாயகன்
என்கிற இமேஜ் பற்றி கவலைப்படாமல்நடிகன் கதாபாத்திரத்திற்கேற்ப எப்படிப்பட்ட நடிப்பைக் கொடுக்க வேண்டும்  என்பதை பஞ்ச் வசனம் பேசி, நாலு சண்டை, குத்து பாடல்களை மட்டுமே தங்களுக்கான திரைக்கதை வட்டமாக உருவாக்கி கொண்ட நடிகர்கள் இந்தப் படத்தை பார்த்தாவது தங்களை மாற்றிக்கொள்ள முயற்சிக்கவேண்டும்
பயணிகள் கவனத்திற்கு குடும்பத்துடன் பயணிக்க வேண்டிய படம்