ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து கடந்த 2019ல் வெளியான படம் மிஸ்டர் லோக்கல் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது நன்றிக்கடனுக்காக நடித்த படம் மனதுக்கு நிறைவாக அமைந்த திரைக்கதை இதனை என் விருப்பபடி தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு நன்றி என அப்போது கூறினார் படம் வெளியான பின் கடுமையாக விமர்சிக்கப்பட்ட படம் என்பதுடன் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது அதன் பின் அந்தப் படம் பற்றியோ, தயாரிப்பாளர் சம்பளப்பாக்கி வைத்துள்ளார் என சிவகார்த்திகேயன் திரைப்பட துறைசார்ந்த சங்கங்களில் புகார் தெரிவிக்கவில்லை திடீர் என்று
மிஸ்டர்லோக்கல் படத்திற்காக தனக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், ஆனால் ரூ.11 கோடி மட்டுமே தயாரிப்பாளர் வழங்கியதாகவும் மீதி தொகையை வசூலித்து தரும்படி ஞானவேல்ராஜாவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்சிவகார்த்திகேயன்.
Related Posts
இதற்கு ஞானவேல்ராஜா தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் மிஸ்டர் லோக்கல்படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அந்த படத்தின் கதையே தனக்கு பிடிக்கவில்லை. சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே தயாரித்தேன். மூன்றாண்டுகளாக வழக்கு தொடராமல் இப்போது சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தது ஏன், நிறைய உண்மைகளை சிவகார்த்திகேயன் கூறவில்லை என்று பதில் மனு தாக்கல் செய்தனர்
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்றுஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்?, டிடிஎஸ் தொகை தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில் மற்றொரு மனு தாக்கல் செய்தது ஏன்? என சிவகார்த்திகேயனிடம் சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.