மத்திய அரசை விமர்ச்சித்த 2000ம் படத்துக்கு தணிக்கையில்165 இடங்களில் வெட்டு

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று 1000ம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீர் என்று இரவில் மத்திய அரசு அறிவித்தது. இதனால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகளை கருவாக வைத்து, ‘2000’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி இருக்கிறது.

தயாரிப்பாளர் கோ.பச்சியப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ருத்ரன் பராசு நாயகனாகவும் சர்னிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் ‘கராத்தே’ வெங்கடேசன், மூர்த்தி, பிர்லா போஸ், ரஞ்சன், தர்சன், கற்பகவல்லி, பிரியதர்சினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படம் இந்திய ஒன்றிய அரசை நேரடியாக விமர்சிப்பதாக கூறி, சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர்.

இதனால்இத்திரைப்படம் மறுபரிசீலனை குழுவினருக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. நடிகை கவுதமி தலைமையிலான மறுபரிசீலனை குழுவினர் இப்படத்தை பார்த்துவிட்டு, 105 இடங்களில் காட்சிகளை நீக்கும்படி தெரிவித்தனர்.

இதன் பின்பு வெட்டுகள் கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் ஆதாரங்களும், ஆவணங்களும் கொடுக்கப்பட்டதால், நீக்கப்பட வேண்டியவை 24 காட்சிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது