தனுஷ் – சன் பிக்சர்ஸ் திடீர் அறிவிப்பு ஏன்?

நேற்று திடீரென கலாநிதி மாறன் தனுஷ் ஆகியோரின் படங்களோடு, தனுஷ் 44 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது.

அதில் தனுஷ் தவிர வேறு யார் பெயரும் இல்லை. குறிப்பாக இயக்குநர் பற்றிய அறிவிப்பு இல்லை.

ஏன் இப்படி? என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்….

தனுஷ் இயக்கி நடித்த முதல் படம் ‘பவர் பாண்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து, இயக்கிய பெயரிடப்படாத படம் ஒன்று தொடங்கப்பட்டது.

தமிழ்,தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரம் உருவாவதாகச் சொல்லப்பட்டது..

அந்தப் படத்தில் தனுஷுடன் கதாநாயகியாக அதிதி ராவ் நடிக்க, நாகார்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் என்று பலர் நடித்தனர். படத்தின் ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் கவனிக்க ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார், பிரசன்னா படத்தொகுப்பு செய்தார்.

பல நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படம் நின்று போனது.

அதற்குக் காரணம் அப்படத்தைத் தயாரித்த ஶ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கல்தாம்.

இப்போது அந்தப்படத்தைத் தான் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

பழைய படம் என்பதைத் தொடக்கத்திலேயே வெளிப்படுத்த வேண்டாம் என்பதற்காகவே முதல் அறிவிப்பில் தனுஷ் பெயர் மட்டும் வந்தது என்றும் சொல்கிறார்கள்.