இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் யார் என்கிற தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது
அதில் அக்க்ஷய் குமார் 48.5 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய மதிப்பில் 366 கோடி ரூபாய் சம்பாதித்து 52வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த வருடம் 65 மில்லியன் யுஎஸ் டாலர், அதாவது 466 கோடி ரூபாய் சம்பாதித்து 33வது இடத்தில் இருந்தவருக்கு இந்த வருடம் பின்னடைவுதான் என்றாலும் இந்திய அளவில் முதல் இடம்
ஹாலிவுட் பிரபலங்களான வில் ஸ்மித் (69வது இடம்), ஜாக்கி சான் (80), ஏஞ்லினா ஜோலி (99), ஆகியோரை அக்க்ஷய்குமார் முந்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்க்ஷய்குமார் கதாநாயகனாக நடித்து கடந்த வருடம் ‘கேசரி, மிஷன் மங்கள், ஹவுஸ்புல் 4, குட் நியூஸ்’ ஆகிய படங்கள் வெளிவந்தன.
இந்த வருடத்தில் இன்னும் எந்தப் படமும் வெளியாகவில்லை. தற்போது, “லட்சுமி பாம், பிரித்விராஜ், சூர்யவன்ஷி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.