அம்மாவாக நடித்திருக்கிறார் ஊர்வசி. திறந்து இருக்கும் வீடுகளை வெளியே பூட்டி விட்டு வந்து விடுவது,அடுத்த வீட்டுக்கு வந்த கடிதங்களைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவது, வீட்டில் உள்ள மோதிரத்தைக் கொண்டு போய்ப் யாருக்காவது தானம் செய்வது என வழக்கத்துக்கு மாறான குணங்கள் கொண்ட வேடம். நான் யாரு தெரியுமா? இந்திரா காந்தி ஃபிரண்டு, ஜெயலலிதா ஃபிரண்டு என்று பெருமை பேசுவதும்,நானா நைனா உன்னெ அடிச்சேன், நீ தானே அடிச்சே என்று அப்பாவித்தனமாகக் கேட்பதும்,நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியல,என்னால உங்களுக்கு எவ்வளவு பிரச்னை எனப் புலம்புவதும் ஊர்வசிக்கே உரிய தனிச்சிறப்பு.
இதுவரை நகைச்சுவை நடிகராகவே பார்த்த மாறனுக்கு இந்தப்படத்தில் மிகவும் மாறுபட்ட வேடம், மிகப் பொறுப்பான அந்த வேடத்தை நிறைவாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் தினேஷ், இப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஊர்வசியின் மகள்களாக நடித்திருக்கும் மெலடி டார்கஸ், தாட்சாயிணி ஆகியோரும் மருமகள்களாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, சபீதா ராய் ஆகிய அனைத்துப் பெண்களும் திரைக்கதையை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள்.வட்டிக்
இப்படம் ஓர் உண்மைநிகழ்வை அடிப்படையாகக் கொண்டது.அந்நிகழ்வில் இந்த அம்மாவைக் காப்பாற்றி குடும்பத்துடன் சேர்த்த இராணுவவீரர் சேகர் நாராயணன், திரையிலும் அதைத் திரும்பச் செய்திருக்கிறார்.
டோனிபிரிட்டோவின் இசையில் பாடல்கள் நன்று.குறிப்பாக, கபிலனின் வரிகளில் சித்ரா பாடியிருக்கும் யார் பாடலை என்கிற பாடல் திரும்பத் திரும்பக் கேட்கவைக்கிறது.ஜெயந்த் சேதுமாதவனின் ஒளிப்பதிவு படம் போல இல்லாமல் நிஜம் போல அமைந்திருக்கிறது.தன் குடும்பத்தில் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வைத் திரையில் எழுதி அதுவும் தேர்ந்த திரைமொழியில் எழுதி பார்ப்போரை நெகிழ வைத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ்மாரி.