மலையாளத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘ஒருத் தீ
வி.கே.பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடித்துள்ளார். இவர் தமிழில் திமிரு, சிலம்பாட்டம், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். ஒருத் தீ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது அதில் நடிகர் விநாயகனிடம் மீ டூ குறித்து கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு மீ டூ என்றால் என்ன என்று எதிர் கேள்வி எழுப்பியதுடன் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொண்டவர்கள் இங்கு யாராவது இருக்கிறீர்களா, நான் இதுவரை பத்து பேருடன் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளேன். ஆனால் அவர்களின் அனுமதி பெற்றுதான் அதை செய்தேன்.எனக்கு ஒருவரை பிடித்து இருந்தால் அவரிடம் நேரடியாகவே இதுபற்றி கேட்டு விடுவேன்அவர்களுக்கு விருப்பமில்லை என்றால் அதை அவர்கள் உடனே நோ சொல்லி விடலாமே என்று கூட்டத்தில் இருப்பவர்களைப் பார்த்தபடி கேள்வி எழுப்பினார். அவரது இந்த பேச்சு நிருபர்களை, குறிப்பாக அங்கே அமர்ந்திருந்த ஒரு பெண் நிருபரை ரொம்பவே சங்கடப்படுத்தியது.இந்த விஷயம் பத்திரிக்கையாளர்கள் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது.. இதைத்தொடர்ந்து தற்போது எந்த ஒரு உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு இப்படி பேசவில்லை என்றும், அந்த பெண் பத்திரிகையாளருக்கு நான் பேசியதன் மூலம் ஏதாவது சங்கடம் ஏற்பட்டு இருந்தால் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார் விநாயகன்.