கேரளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், கேரளத் திரையரங்க உரிமையாளர் சங்கம் என இரு தரப்புக்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி ஆகஸ்ட் 12ஆம் தேதி, 600 திரைகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டு மூன்று வாரங்கள் மட்டும் ஓடும். கொரோனா நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மலையாளத் திரையுலகை மீட்டெடுக்கும் முயற்சியாக இது கூறப்பட்டது
கொரோனா பயம் தெளிந்து, தன்னம்பிக்கையுடன்ஒரு பிரம்மாண்டமான படத்தைப் பார்க்க ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் ’மரைக்காயர்’ திரைப்படம் ஓடும் 3 வாரங்களுக்கு வேறெந்த திரைப்படங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது .100 கோடி ரூபாய் செலவில் இந்தப் படம் தயாரிக்கபட்டுள்ளதுஇந்த படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இதன் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டிலேயே முடிந்து கொரோனா பரவலால் முடங்கியது. இதுபோல் திரைக்கு வர தயாராக இருந்த பகத் பாசிலின் மாலிக், நிவின் பாலி நடித்துள்ள துறைமுகம், துல்கர் சல்மானின் குரூப், பிருதிவிராஜின் குருதி, ஆடு ஜீவிதம் உள்பட 10-க்கும் மேற்பட்ட படங்கள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன.
பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’மரைக்காயர்’ படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 2020க்கான தேசிய விருதுகளில் சிறந்த படம், சிறந்த கிராஃபிக்ஸ், சிறந்த உடையலங்காரம் என 3 தேசிய விருதுகளை இந்தப் படம் வென்றது குறிப்பிடத்தக்கது. இது ஒரு தலைப்பட்சமான முடிவு என்று மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.